2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இலங்கை அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஜூலை 2017, 7:25 pm

DIN

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை டெஸ்ட் போட்டியில் விளையாடாத 30 வயது இடதுகை சுழற்பந்து வீச்சாளரான மலிந்தா புஷ்பகுமாரா இலங்கை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் முதல் தர கிரிக்கெட் போட்டியில் 558 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சுழற்பந்து வீச்சாளர் லக்ஷன் சன்டாகனுக்குப் பதிலாக மலிந்தா இடம்பெற்றுள்ளார்.
3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டி வரும் புதன்கிழமை காலேவில் தொடங்குகிறது.
அணி விவரம்: ரங்கனா ஹெராத் (கேப்டன்), உபுல் தரங்கா, திமுத் கருணாரத்னே, குஷல் மென்டிஸ், ஏஞ்செலோ மேத்யூஸ், அசேல குணரத்னே, நிரோஷன் டிக்வெல்லா, தனஞ்ஜெயா டி சில்வா, தனுஷ்கா குணதிலகா, தில்ருவன் பெரேரா, சுரங்கா லக்மல், லஹிரு திரிமானி, விஸ்வா பெர்னாண்டோ, மலிந்தா புஷ்பகுமாரா, நுவான் பிரதீப்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.