கடைசி டெஸ்ட் போட்டி நடைபெறும் தர்மசலா மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி இந்திய அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
தற்போது தர்மசாலா வந்துள்ள சமி, இந்திய அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் கடைசி 2 டெஸ்டுகளில் சமி காயம் காரணமாக விளையாடவில்லை. ஆஸி.யுடனான தொடரிலும் இதுவரை விளையாடவில்லை. இந்திய அணியிலும் இடம்பெறவில்லை. ஆனால் அவர் விஜய் ஹசாரே போட்டியில் பங்கேற்று தனது உடற்தகுதியை நிரூபித்துள்ளார். தர்மசாலாவில் இந்திய அணியுடன் பயிற்சியில் ஈடுபடுவதாக சமி ட்வீட்டும் செய்துள்ளார். வலைப்பயிற்சியில் சமி எவ்வாறு ஈடுபடுகிறார் என்பதைப் பொறுத்து அவரை அணியில் சேர்க்க தேர்வுக்குழு முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஷாந்த் சர்மா இந்தத் தொடரில் மூன்று விக்கெட்டுகள் மட்டுமே எடுத்துள்ளார். எனவே அவருக்குப் பதிலாக சமி அல்லது புவனேஷ்வர் குமார் அல்லது உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், சமி என 3 வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் சேர்க்கப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எண்ணெய் கப்பலை கடத்திய சோமாலிய கடற்கொள்ளையர்கள்! மாலுமிகளின் நிலை என்ன?

கிரக தோஷங்கள் நீக்கும் பெரியவாபுரம்!

மமதாவும், மோடியும் மக்களுக்காக உழைப்பதில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை... முதல் இந்தியராக சாதனை படைத்த கே.எல். ராகுல்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


