அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

நிம்மதியாக உறங்குவது எப்படி?: தலாய் லாமாவிடம் ஸ்மித் கேள்வி! (புகைப்படங்கள்)

இங்கிலாந்து அணியினர் தலாய் லாமாவை சந்திக்க முயன்றபோது, அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது...

News image
Updated On :25 மார்ச் 2017, 7:01 am

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹிமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று தொடங்கியது. 

இந்நிலையில், ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான அந்த அணியினர், தர்மசாலாவில் உள்ள திபெத்திய மத குருவான தலாய் லாமாவை அவரது மடத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்தனர்.

இச்சந்திப்புக்குப் பிறகு ஸ்மித் பேசிய ஸ்மித்,  'தலாய் லாமாவுடனான சந்திப்பு அற்புதமானதாக இருந்தது. நிம்மதியாக உறங்குவது குறித்து அவரிடம் கேள்விகள் கேட்டேன். அதற்கு அவர் என்னை அருகில் அழைத்து ஆசி வழங்கினார். அவரது அந்த ஆசிகள், அடுத்த 5 நாள்களுக்கு எனக்கு நிம்மதியான உறக்கத்தை தரும் என நம்புகிறேன்' என்று கூறினார். முன்னதாக, கடந்த 2013-ஆம் ஆண்டு இந்தியா வந்த இங்கிலாந்து அணியினர் தலாய் லாமாவை சந்திக்க முயன்றபோது, அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது குறிப்பிடத்தக்கது.

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.