ஐபிஎல்: மும்பை அணிக்கு 163 ரன்கள் இலக்கு!
மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் பெங்களூர் அணி 162 ரன்கள் எடுத்துள்ளது.


மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் பெங்களூர் அணி 162 ரன்கள் எடுத்துள்ளது.
மும்பையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
தொடக்க வீரராகக் களமிறங்கிய கோலி 20 ரன்களில் ஆட்டமிழந்தார். டிவில்லியர்ஸ் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார். பவன் நகி வேகமாக ஆடி 23 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார்.
பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. மெக்லீனாகான் வீசிய கடைசி ஓவரின் கடைசி மூன்று பந்துகளில் மூன்று விக்கெட்டுகள் வீழ்ந்தன. கடைசிப் பந்தில் மெக்லீனாகானின் ஹாட்ரிக் எடுக்க முயற்சி செய்தார். ஆனால் அரவிந்த் ரன் அவுட் ஆனார். மும்பை அணித் தரப்பில் மெக்லீனாகான் மூன்று விக்கெட்டுகள் எடுத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...