துபாய்: உலக அளவில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில், இந்தியா 123 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தினை பிடித்திருக்கிறது.
உலக அளவில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிடுகிறது. இந்த ஆண்டுக்கான புள்ளி பட்டியலானது வருடாந்திர கணக்கீட்டுக்குப் பிறகு இன்று வெளியிடப்பட்டது.
இந்த பட்டியலில் விராத் கோலி தலைமையலான் இந்திய அணி 123 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தினை பிடித்திருக்கிறது. 117 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்க அணியானது இரண்டாம் இடத்தினை பிடித்திருக்கிறது. ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியானது 100 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.
இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து (99) நான்காமிடத்திலும், நியூசிலாந்து (96) ஐந்தாமிடத்திலும், பாகிஸ்தான் (93) ஆறாமிடத்திலும், இலங்கை (91) ஏழாமிடத்திலும், மேற்கிந்திய தீவுக ள் அணி (75) எட்டாமிடத்திலும், இறுதியாக வங்கதேசம் (69) ஒன்பதாமிடத்திலும் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை தி. நகரில் ரூ. 29 கோடி தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்!

சென்னையில் பார்க்க வேண்டிய 10 திருக்கோயில்கள்!

பிரதமர் மோடியின் பாதுகாப்பு வளையத்துக்குள் ஊடுருவ உதவுவதாகக் கூறிய பிகார் நபர் கைது!

மதுராவில் கவிழ்ந்த படகு மீட்பு: மாயமான சுற்றுலாப் பயணிகளின் நிலை?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


