தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

வெளிநாடுகளில் அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவருக்குமே அணியில் இடமளிப்பது கடினம்: விராட் கோலி தகவல்!

அவர்கள் இருவரும் பேட்டிங் திறமை உள்ளவர்கள். ஒரு டெஸ்ட் போட்டியில் தேர்வாக எல்லாத் தகுதிகளும்...

News image
Updated On :23 நவம்பர் 2017, 12:21 pm

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் இலங்கை அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கேப்டன் விராட் கோலி, அஸ்வின் - ஜடேஜா குறித்து கூறியதாவது: 

உண்மையாகச் சொல்லவேண்டுமென்றால், வெளிநாடுகளில் விளையாடும்போது அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவரும் அணியில் இடம்பெறுவார்கள் என்று என்னால் 100 சதவிகிதம் கூறமுடியாது. ஏனெனில், அணியின் தேவைகள் என்ன என்பதையும் பார்க்கவேண்டும். அவர்கள் இருவரும் பேட்டிங் திறமை உள்ளவர்கள். ஒரு டெஸ்ட் போட்டியில் தேர்வாக எல்லாத் தகுதிகளும் கொண்டவர்கள். ஆனால் எதிரணியில் உள்ள பேட்ஸ்மேன்களில் எத்தனை பேர் வலது கை பேட்ஸ்மேன்கள் அல்லது இடது கை பேட்ஸ்மேன்கள் என்பதை வைத்துதான் இவர்களில் ஒருவரைத் தேர்வு செய்யமுடியும்.

எந்தக் கோணத்தில் பந்துவீசப்படுகிறது என்பது டெஸ்ட் போட்டியில் முக்கியமான அம்சம். இதுபோன்ற சிறிய விஷயங்களைக் கொண்டு வெளிநாட்டு டெஸ்டுகளில் சுழற்பந்துவீச்சாளரைத் தேர்வு செய்வோம். அவர்கள் இருவரையும் ஆல்ரவுண்டர்களாகவே கருதுகிறோம். இருவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்களை நிரூபித்தவர்கள். இருவரும் அணியில் விளையாடும்போது கூடுதலாக ஒரு பந்துவீச்சாளரை அணியில் சேர்க்கலாம் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.