ஆசிய கோப்பை ஹாக்கி: ஜப்பானை வீழ்த்தியது இந்தியா!
ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியில் ஜப்பானை 5-1 என இந்திய அணி வீழ்த்தியுள்ளது...


ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியில் ஜப்பானை 5-1 என இந்திய அணி வீழ்த்தியுள்ளது.
டாக்காவில் நடைபெறும் ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியில் இன்று தனது முதல் ஆட்டத்தை விளையாடிய இந்திய அணி ஜப்பானை எதிர்கொண்டது.
சுனில் 3-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அடுத்த நிமிடமே ஜப்பானும் கோல் அடித்து சமன் செய்தது. 22-வது நிமிடத்தில் இந்திய அணி 2-வது கோலை அடித்தது. முதல் பாதியின்போது இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றிருந்தது.
இதன் பின்னர் ரமண்தீப் சிங் கோல் அடுத்து ஆதிக்கத்தை நிலைநிறுத்தினார். பிறகு 13 நிமிட இடைவெளியில் ரமண்தீப் சிங் இரண்டு கோல்களை அடித்து அசத்தினார். இதையடுத்து இந்திய அணி 5-1 என்கிற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
வெள்ளியன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்துடன் மோதுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...