இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

உலகக் கோப்பை கால்பந்து: மெஸ்ஸி ஹாட்ரிக்; ஆர்ஜென்டீனா தகுதி! (வீடியோ)

இந்தப் போட்டியில் தோல்வியடைந்திருந்தால் ஆர்ஜென்டீனா அணியால் உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெற முடியாமல் போயிருக்கும்.

News image
Updated On :11 அக்டோபர் 2017, 7:29 am

எழில்

ரஷியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க ஆர்ஜென்டீனா அணி தகுதி பெற்றுள்ளது.

ஆர்ஜென்டீனா - ஈகுவடார் அணிகளுக்கு இடையே நடைபெற்ற தகுதிச்சுற்றுப் போட்டியில், முதல் 38 நொடிகளில் முதல் கோல் அடித்து அதிர்ச்சி அளித்தது ஈகுவடார் அணி. ஆனால் அடுத்த 20 நிமிடங்களில் இரு கோல்கள் அடித்து தனது அணியை முன்னிலை பெற வைத்தார் ஆர்ஜென்டீனாவின் மெஸ்ஸி. பிறகு 62-வது நிமிடத்திலும் மற்றொரு கோல் மூலமாக ஹாட்ரிக் அடித்து அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார். இதனால் 3-1 என்கிற கணக்கில் ஈகுவடாரைத் தோற்கடித்து உலகக் கோப்பைப் போட்டிக்கு ஆர்ஜென்டீனா தகுதி பெற்றது.  

இந்தப் போட்டியில் தோல்வியடைந்திருந்தால் ஆர்ஜென்டீனா அணியால் உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெற முடியாமல் போயிருக்கும். ஆனால் மெஸ்ஸியின் அசத்தலான ஆட்டத்தால் தகுதி பெறுவது சாத்தியமாகியுள்ளது. தகுதிச்சுற்றுப் போட்டியில் இந்த ஆட்டத்துக்கு முன்பு ஆறாவது இடத்தில் இருந்தது ஆர்ஜென்டீனா. முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெறும். 5-வது இடம் பிடித்தால் நியூசிலாந்துக்கு எதிரான மற்றொரு தகுதிச்சுற்றில் விளையாடவேண்டியிருக்கும். இந்நிலையில் இந்த வெற்றியின் மூலம் மூன்றாம் இடத்துக்கு உயர்ந்து உலகக் கோப்பைப் போட்டிக்கு ஆர்ஜென்டீனா தகுதி பெற்றுள்ளது. 

கடந்தமுறை நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் இறுதிச்சுற்றில் ஜெர்மனியிடன் 0-1 எனத் தோற்று இரண்டாம் இடம் பிடித்தது ஆர்ஜென்டீனா. அடுத்த வருட உலகக் கோப்பைப் போட்டிக்குத் தென் அமெரிக்காவில் இருந்து பிரேசில், உருகுவே, ஆர்ஜென்டீனா, கொலம்பியா ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.