விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

அமெரிக்க ஓபன்: அரையிறுதிக்குத் தகுதி பெற்று வீனஸ் வில்லியம்ஸ் சாதனை!

அமெரிக்க ஓபன் வரலாற்றில் அரையிறுதிக்குத் தகுதி பெற்ற வீராங்கனைகளில் அதிக வயது கொண்டவர் என்கிற சாதனையை நிகழ்த்தியுள்ளார்...

News image
Updated On :6 செப்டம்பர் 2017, 5:21 am

எழில்

அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இதன் அடிப்படையில் அமெரிக்க ஓபன் வரலாற்றில் அரையிறுதிக்குத் தகுதி பெற்ற வீராங்கனைகளில் அதிக வயது கொண்டவர் என்கிற சாதனையை நிகழ்த்தியுள்ளார். வீனஸுக்கு 37 வயது. 

வீனஸ் வில்லியம்ஸ் - கிவிட்டோவா இடையே இடையே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில், 6-3, 3-6, 7-6(2) என்ற செட் கணக்கில் வீனஸ் வில்லியம்ஸ், கிவிட்டோவாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். 1994-க்குப் பிறகு ஒரு கிராண்ஸ்லாமின் அரையிறுதிக்குத் தகுதிபெற்ற அதிக வயதுடைய வீராங்கனை என்கிற பெருமையையும் வீனஸ் வில்லியம்ஸ் பெற்றுள்ளார்.

Story image

மற்றொரு காலிறுதியில் ஸ்லோன் ஸ்டீபனஸ், முந்தைய சுற்றில் ஷரபோவை வீழ்த்திய லாத்வியாவின்  அனஸ்தாஸிஜா செவஸ்டோவாவைத் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார். ஸ்லோன் ஸ்டீபனஸ், 6-3, 3-6, 7-6(7-4) என்ற செட் கணக்கில் வென்றார். 

அமெரிக்க ஓபன் வரலாற்றில் காலிறுதியில் மூன்று கருப்பின வீராங்கனைகள் தகுதிபெற்றது இதுவே முதல்முறை. வீனஸ் வில்லியம்ஸ், ஸ்லோன் ஸ்டீபன்ஸ், மேடிசன் கீஸ் ஆகிய மூவரில் இருவர் இதுவரை அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார்கள். 

அரையிறுதியில் ஸ்லோன் ஸ்டீபன்ஸை எதிர்கொள்கிறார் வீனஸ் வில்லியம்ஸ்.

மற்ற இரு காலிறுதிப் போட்டிகளில் கரோலினா பிளிஸ்கோவா - கோகோ வான்டெவெக், மேடிசன் கீஸ் -  கையா கானேபி ஆகியோர் மோதுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.