நியூயார்க்: பிரபல அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் வெளியிட்டுள்ள அவரது குழந்தையின் முதல் போட்டோ தற்பொழுது இணையத்தின் வைரலாகப் பரவி வருகிறது.
உலகப் புகழ் பெற்ற அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ். இவர் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் டென்னிஸ் போட்டித் தொடர் ஒன்றில் விளையாட இத்தாலியின் ரோம் நகருக்கு சென்ற பொழுது 'ரெடிட்' சமூக வலைதளத்தின் இணை இயக்குனர் அலெக்சிஸ் ஓஹானியன் என்பவரை சந்தித்தார். அவர்கள் இடையே காதல் மலர்ந்தது.
ஒன்றாக வசித்த அவர்களுக்கு கடந்த 1-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு தனது குழந்தை உடனான முதல் படத்தை செரீனா தற்பொழுது சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். அத்துடன் குழந்தையுடன் இருக்கும் 2 நிமிட வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவரது கர்ப்பக் கால புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த பதிவில் அவர் தனது குழந்தையை ஜூனியர் அலெக்ஸிஸ் ஒலிம்பியா ஓஹானியன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இணையத்தில் தற்பொழுது அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகப் பரவி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


