3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

டாஸ் வென்ற இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்: கோலி டக்-அவுட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.

News image
Updated On :17 செப்டம்பர் 2017, 9:08 am

DIN

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நடைபெறுகிறது. அதனால் இந்த ஆட்டத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணிக் கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ரஹானே 5 ரன்களில் வெளியேற கோலி, பாண்டே டக்-அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.

இந்தியா 10 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 34 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் 12 ரன்கள், கேதர் ஜாதவ் 14 ரன்களுடன் விளையாடி வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் நாதன் கௌடர் நைல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்தியா 5-0 என்ற கணக்கில் கைப்பற்றுமானால் தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்கும். அதேநேரத்தில் இந்தத் தொடரை ஆஸ்திரேலியா 4-1 என்ற கணக்கில் வெல்லுமானால் அந்த அணி முதலிடத்தைப் பிடிக்கும். 

தற்போதைய நிலையில் தென் ஆப்பிரிக்கா முதலிடத்திலும், ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் முறையே 2 மற்றும் 3-ஆவது இடங்களிலும் உள்ளன.

இரு அணி வீரர்கள் விவரம்:

இந்தியா:

ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே, விராட் கோலி (கேப்டன்), மணீஷ் பாண்டே, தோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹார்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், யசுவேந்திர சாஹல், ஜஸ்ப்ரீத் பும்ரா.

ஆஸ்திரேலியா:

டேவிட் வார்னர், ஹில்டன் கார்ட்ரைட், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் ஃபால்க்னர், பாட் கம்மின்ஸ், நாதன் கௌடர் நைல், ஆடம் சாம்பா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.