பத்ம பூஷன் விருதுக்கு தோனியின் பெயர் பரிந்துரை!

தோனியைத் தவிர வேறு யாரையும் பத்ம விருதுகளுக்காக பிசிசிஐ பரிந்துரை செய்யவில்லை.... 
பத்ம பூஷன் விருதுக்கு தோனியின் பெயர் பரிந்துரை!

கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், குடிமைப் பணி, வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்விருதுகள் தொழில், இனம், உத்தியோகம், பாலினம் ஆகிய வித்தியாசமின்றி வழங்கப்படுகிறது. அந்த வகையில், வருகிற 2018-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு தகுதியான நபர்களின் பெயர்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் தோனிக்குப் பத்ம பூஷன் விருது வழங்க மத்திய அரசுக்கு பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. தோனியைத் தவிர வேறு யாரையும் பத்ம விருதுகளுக்காக பிசிசிஐ பரிந்துரை செய்யவில்லை. 

தோனிக்குப் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டால், இந்த விருதைப் பெறும் 11-வது கிரிக்கெட் வீரர் என்கிற பெயரை அவர் பெறுவார். இதற்கு முன்பு, சச்சின், கபில் தேவ், சுனில் கவாஸ்கர், ராகுல் டிராவிட், சாந்து போர்டே, டிபி தியோதர், சிகே நாயுடு, லாலா அமர்நாத், ராஜா பலிந்திரா சிங், விஜய ஆனந்த் என இதுவரை 10 கிரிக்கெட் வீரர்கள் பத்ம பூஷன் விருதைப் பெற்றுள்ளார்கள். 2009-ம் ஆண்டு தோனிக்குப் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com