சென்னை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் யார் யார்?திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

ரஞ்சிப் போட்டியில் விளையாடவுள்ள அஸ்வின் & ஜடேஜா!

ரஞ்சிப் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் இந்திய டெஸ்ட் வீரர்களான அஸ்வின், ஜடேஜா, புஜாரா, விஜய் ஆகிய வீரர்கள் பங்கேற்கவுள்ளார்கள்...

News image
Updated On :30 செப்டம்பர் 2017, 4:57 am

எழில்

ரஞ்சிப் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் இந்திய டெஸ்ட் வீரர்களான அஸ்வின், ஜடேஜா, புஜாரா, விஜய் ஆகிய வீரர்கள் பங்கேற்கவுள்ளார்கள்.

ரஞ்சிப் போட்டியில் கலந்துகொள்வது தொடர்பாக அஸ்வின், விஜய் ஆகிய இருவரும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்குத் தகவல் அளித்துள்ளார்கள். ஜடேஜா, புஜாரா ஆகிய இருவரும் செளராஷ்டிரா அணியின் 15 பேர் கொண்ட ரஞ்சி அணியில் இடம்பிடித்துள்ளார்கள். அந்த அணியின் கேப்டனாக புஜாரா அறிவிக்கப்பட்டுள்ளார்.  அக்டோபர் 6 அன்று செளராஷ்டிரா - ஹரியாணா ஆகிய அணிகளுக்கு இடையேயான ரஞ்சி ஆட்டம் லஹ்லியில் நடைபெறவுள்ளது. 

தமிழ்நாடு - ஆந்திரா இடையேயான ரஞ்சி ஆட்டம் அக்டோபர் 9 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் விஜய், அஸ்வின் ஆகிய இருவரும் கலந்துகொள்ளவுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.