சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

மீண்டும் மன்னிப்பு கோரினார் வார்னர்: தண்டனையை ஏற்பதாக அறிவிப்பு!

ஓராண்டுத் தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என டேவிட் வார்னரும் அறிவித்துள்ளார்...

News image
Updated On :5 ஏப்ரல் 2018, 11:02 am

எழில்

ஓராண்டுத் தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என டேவிட் வார்னரும் அறிவித்துள்ளார்.

3-வது டெஸ்ட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரரான பான்கிராஃப்ட், தன்னிடம் இருந்த சொரசொரப்பு தன்மை கொண்ட
பொருளை வைத்து பந்தை சேதப்படுத்த முயன்றது கேமராக்களின் கண்களில் பதிவாகியது. இதையடுத்து, அந்தப் பொருளை அவர் தனது ஆடைக்குள் மறைத்து வைத்தார். ஆட்டம் முடிவடைந்ததும் அந்தக் குற்றச்சாட்டை ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராஃப்ட் ஆகியோர் ஒப்புக் கொண்டனர். அத்துடன், ஸ்மித்தும், டேவிட் வார்னரும் அணியில் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொறுப்புகளிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். அவர்கள் இருவருக்கும் ஓராண்டு காலம் தடை விதித்து 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' நடவடிக்கை மேற்கொண்டது. பான்கிராஃப்டுக்கு 9 மாத காலம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. நாடு திரும்பிய ஸ்மித், செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க அண்மையில் பேட்டியளித்தார். அது அவருக்குப் பல்வேறு தரப்புகளில் அனுதாபத்தை ஏற்படுத்தியது. தடையை எதிர்த்து முறையீடு செய்ய மூவருக்கும் வரும் 11-ம் தேதி வரை அவகாசம் உள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத் தலைவர் கிரெக் டயர் ஓராண்டு தடை விதிக்கப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளார். பந்தை சேதப்படுத்திய புகார் தொடர்பாக கடினமான தண்டனை அளிக்க வேண்டியதில்லை என்றார்.

கிரிக்கெட் பந்தைச் சேதப்படுத்தியது தொடர்பான புகாரில் தனக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் ஃபான்கிராஃப்டும் நேற்று தெரிவித்தார்கள். இதுதொடர்பாக ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது: எனக்கு விதிக்கப்பட்ட ஓராண்டுத் தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை. இந்த தண்டனை எனக்குக் கிடைக்க வேண்டியது தான். இதன் மூலம் மற்றவர்களுக்கும் கடினமான எச்சரிக்கையாக அமையும். இதே போல் கேமரூன் பான்கிராப்டும் தனக்கு விதிக்கப்பட்ட ஓராண்டுத் தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

இந்நிலையில், ஸ்மித், ஃபான்கிராஃப்ட் போல தானும் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று டேவிட் வார்னர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: என் மீதான ஓராண்டுத் தடையை முழுமையாக ஏற்பதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்குத் தெரியப்படுத்துகிறேன். என்னுடைய நடவடிக்கைகளுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சிறந்த மனிதனாக, சிறந்த வீரராக, சிறந்த ரோல்மாடலாக இருப்பதற்கான அனைத்து நல்ல விஷயங்களையும் இனி நான் செய்வேன் என்று வாக்குறுதியளித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.