ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் நிகழாண்டு தில்லி டேர்டேவில்ஸ் பட்டம் வெல்லும் என அதன் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தில்லி டேர்டெவில்ஸ் அணி கடந்த 10 போட்டிகளிலும் குறிப்பிடத்தக்க வெற்றி எதையும் பெறவில்லை. 2 முறை அரையிறுதிச் சுற்றுக்கு மட்டுமே முன்னேறியது. தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள பாண்டிங் கூறியதாவது:
கெளதம் காம்பீர் தலைமையில் டேர் டெவில்ஸ் அணி இந்த முறை சாம்பியன் பட்டத்தை வெல்லும். அணியின் முந்தைய நிலை குறித்து கவலையில்லை. தற்போது புதிய வீரர்களைக் கொண்ட குழு உள்ளது. வீரர்கள் அனைவரும் நன்றாக தயார்படுத்திக் கொண்டுள்ளனர். களத்தில் திட்டங்களை செயல்படுத்தினால் வெற்றி பெறலாம் என்றார்.
டேர்டெவில்ஸ்அணி வீரரும், தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளருமான காகிசோ ரபடா முதுகு காயம் காரணமாக போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: தினேஷ் கார்த்திக் கேப்டன் பொறுப்பேற்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு புதிய தன்னம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது என பயிற்சியாளர் சைமன் கெய்ட்ச் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கெளதம் காம்பீர் தலைமையில் நைட் ரைடர்ஸ் அணி 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்றது. அவர் தற்போது டேர்டெவில்ஸ் அணிக்கு இடம் மாறியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் நைட் ரைடர்ஸ் மோதுகிறது.
மும்பை இண்டியன்ஸ்: முன்னணி பந்து வீச்சாளர்கள் லசித் மலிங்கா, ஹர்பஜன் சிங் இல்லாத நிலையில் ஐபிஎல் போட்டிகளை மும்பை இண்டியன்ஸ் அணி எதிர்கொள்கிறது. பயிற்சியாளர் ஜெயவர்த்தனே, கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:
நாங்கள் தொடக்கத்தில் இருந்து மீண்டும் களம் காண்கிறோம். ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் புதிதாக இணைகிரார். பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோரும் சிறப்பான பார்மில் உள்ளனர். தொடக்க ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம் எனத் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேகமாகப் பரவும் ஷிகெல்லா தொற்று! தற்காத்துக் கொள்வது எப்படி?

நாக் அவுட் சுற்றுக்கு முதல்முறையாக முன்னேறி, வரலாறு படைத்தது தென்னாப்பிரிக்கா!

அயோத்தி ராமா் கோயில் முறைகேடு! சட்ட அதிகாரமில்லா விசாரணைக் குழு என கேஜரிவால் குற்றச்சாட்டு!

என்சிஇஆர்டி 9-ம் வகுப்பு புத்தகத்தில் அவசரநிலை குறித்த பாடம் சேர்ப்பு!
விடியோக்கள்

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |



