இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது.
3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி பங்கேற்றுள்ளது. இதன் இரண்டாவது ஒரு நாள் போட்டி நாக்பூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. டாஸை வென்று பேட் டிங்கை தேர்வு செய்த இந்தியா அணி 37.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்களை மட்டுமே எடுத்தது. ஸ்மிருதி மந்தானா 42, தீப்தி சர்மா 26 ஆகியோர் மட்டுமே ரன் குவித்தனர். ஏனைய 5 வீராங்கனைகளை ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து தரப்பில் டேனியல் ஹசல் 4/32, சோபி எசில்டோன் 4/14 ஆகியோர் அதிரடியாக பந்து வீசினர்.
114 ரன்கள் வெற்றி இலக்குடன் தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி சார்பில் டேனியல் வயாட் 47, டேமி பீமென்ட் 39 ஆகியோர் இணை சேர்ந்து அதிரடியாக 73 ரன்களை குவித்தனர். இருவரும் ஆட்டமிழந்ததை அடுத்து ஆட வந்த ஹீதர் நைட் 42 பந்துகளில் 26 ரன்களை குவித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்திய தரப்பில் ஏக்தா பிஷ்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில் 29 ஒவர்களில் 117 ரன்களை குவித்து இங்கிலாந்து வெற்றி பெற்றது.
முதல் ஒரு நாள் ஆட்டத்தில் இந்தியா வென்றிருந்தது. இந்த வெற்றி மூலம் இங்கிலாந்து தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. மூன்றாவது ஒரு நாள் போட்டி வியாழக்கிழமை நடக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

