பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: நான்கு இந்தியர்கள் பங்கேற்பு!

2018 உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கு நான்கு இந்தியர்கள் தகுதி பெற்றுள்ளார்கள்...

News image
Updated On :27 ஏப்ரல் 2018, 12:05 pm

எழில்

2018 உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கு நான்கு இந்தியர்கள் தகுதி பெற்றுள்ளார்கள்.

தரவரிசையின் அடிப்படையில் பி.வி. சிந்து, சாய்னா நெவால், ஸ்ரீகாந்த், பிரனாய் ஆகிய நான்கு இந்திய வீரர்களும் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்கள். சீனாவில் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 5 வரை இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.

கடந்த வருடம் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சிந்து 19-21, 22-20, 20-22 என்ற செட் கணக்கில் ஜப்பானின் நஜோமி ஒகுஹராவிடம் தோல்வி கண்டார். ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவரான சிந்து, நஜோமியை எளிதாக வீழ்த்தி தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 3-ஆவது செட்டில் கடுமையாகப் போராடிய சிந்து, நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார். இதில் அவர் தங்கம் வென்றிருந்தால், உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றிருப்பார். அரையிறுதியில் தோற்றதால் சாய்னா நெவால் வெண்கலப் பதக்கம் பெற்றார். உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியா முதல்முறையாக 2 பதக்கங்களைப் பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.