சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஐபிஎல்: 13 ரன்கள் வித்தியாசத்தில் தில்லியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்

தில்லி டேர் டேவில்ஸ்  20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்களை எடுத்து தோல்வியடைந்தது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 6:22 pm

DIN

ஐபிஎல் போட்டியின் 30 லீக் போட்டி புனேவில் இன்று நடைபெற்றது.
போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- தில்லி டேர் டேவில்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற தில்லி டேர் டேவில்ஸ் அணி கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார். 
இதனையடுத்து முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்துள்ளது.
அணியில் 7 சிக்ஸர் 4 பவுண்ரிகளுடன் ஷேன் வாட்சன் 78 ரன்களும், டுபிளெசிஸ் 33, அம்பத்தி ராயுடு 41, 5 சிக்ஸர், 2 பவுண்ரிகளுடன் மகேந்திர சிங் தோனி 51 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய தில்லி டேர் டேவில்ஸ்  20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்களை எடுத்து தோல்வியடைந்தது.
தில்லி அணியில்  ப்ரித்வி ஷா 9, கொலின் மன்ரோ 26, ஸ்ரேயாஸ் ஐயர் 13, ரிஷாப் 79, க்ளென் மேக்ஸ்வெல் 6, 5 சிக்ஸர்களுடன் விஜய் ஷங்கர் 54 ரன்களும், ராகுல் திவாடியா 3 ரன்களும் எடுத்து இலக்கை எட்ட முடியாமல் தோல்வியடைந்தனர்.
இந்த ஐபிஎல்2018  சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 போட்டிகளில் பங்கேற்று 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் .  தில்லி டேர் டேவில்ஸ் 8 போட்டிகளில் பங்கேற்று 2  போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.