மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தேசிய கார் பந்தயம்: கெளரவ் கில் முதலிடம்

சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற 40-வது தேசிய கார் பந்தயத்தில் நடப்புச் சாம்பியன் கெளரவ் கில் மீண்டும் முதலிடம் பெற்றுள்ளார்.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 7:42 pm

DIN

சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற 40-வது தேசிய கார் பந்தயத்தில் நடப்புச் சாம்பியன் கெளரவ் கில் மீண்டும் முதலிடம் பெற்றுள்ளார்.
மெட்ராஸ் மோட்டார் விளையாட்டு சங்கம், இந்திய மோட்டார் விளையாட்டு சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் எம்எம்ஆர்டி கார் பந்தய மைதானத்தில் தேசிய கார் பந்தயம் கடந்த 2 நாள்களாக நடைபெற்றது. நாடு முழுவதும் இருந்து முன்னணி வீரர்களைக் கொண்ட 31 குழக்கள் பங்கேற்றன. 
மஹிந்திரா அணி சார்பில் பங்கேற்ற நடப்புச் சாம்பியன கெளரவ் கில் பந்தய தூரத்தை 44 நிமிடம் 35 நொடிகளில் கடந்தார். 
அணிகள் பிரிவில் கில்-மூசா இணை பந்தய தூரத்தை 1 மணி நேரம், 28:43. 1 நிமிடங்களில் கடந்தது. அமித்ரஜித் கோஷ்-அஸ்வின் நாயக் இணை இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
ஐஎன்ஆர்சி 2-இல் கர்ணகடூர், நிகில் வி பாய் இணை முதலிடத்தைப் பெற்றது. ஐஎன்ஆர்சி 3 -இல் விக்ரம் ராவ்-சோமையா இணை முதலிடத்தைப் பெற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.