இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டை இழந்து 226 ரன்களுடன் திணறிக் கொண்டிருந்தது. கேப்டன் கோலி அபாரமாக ஆடி 105 ரன்களுடன் ஆடிக் கொண்டிருந்தார். முன்னதாக இங்கிலாந்து அணி 287 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
டி 20 தொடரை வென்ற நிலையில் இந்திய அணி, ஒரு நாள் போட்டித் தொடரை இங்கிலாந்திடம் இழந்தது. இதன் தொடர்ச்சியாக 5 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இதன் முதல் ஆட்டம் பர்மிங்ஹாம் எட்பாகஸ்டனில் புதன்கிழமை தொடங்கியது. இங்கிலாந்தின் 1000-ஆவது டெஸ்ட்டான இதில் முதலில் ஆடிய அணி முதலில் நாளில் 285/9 ரன்களை எடுத்திருந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை ஆட்டம் தொடங்கியவுடன் மேலும் 2 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் அந்த அணி வீரர் ஸ்டுவர்ட் பிராட் 2 ரன்களுக்கு அஸ்வின் பந்துவீச்சில் வீழ்ந்தார். மொத்தம் 89.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து இங்கிலாந்து 287 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் கேப்டன் ஜோ ரூட் 156 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 80 ரன்களையும், ஜானி பேர்ஸ்டோவ் 88 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 70 ரன்களையும், கியட்டன் ஜென்னிங்ஸ் 98 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 42 ரன்களையும் எடுத்தனர். மற்றவர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய தரப்பில் அஸ்வின் 62 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டையும், முகமது சமி 64 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

ராகுல் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் கர்ரன்
இந்தியா தடுமாற்றம்: சாம் கர்ரன் அபாரம்
பின்னர் முதல் இன்னிங்ஸை துவக்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே சரிவாக அமைந்தது. முரளி விஜய், ஷிகர் தவன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 45 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 20 ரன்களுடன் முரளி விஜய்யும், 46 பந்துகளில் 26 ரன்களுடன் ஷிகர் தவனும், வெறும் 4 ரன்களில் லோகேஷ் ராகுலும், இங்கிலாந்து பந்துவீச்சாளர் சாம் கர்ரன் பந்துவீச்சில் வெளியேறினர்.
பின்னர் கேப்டன் கோலி களமிறங்கி அணியை சரிவில் இருந்து மீட்க முயன்றார். அவர் ஒருபுறம் நிலைத்து ஆடினாலும், மறுமுனைவியில் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்தன.
கோலி அபாரம் 149
ரஹானே 15, தினேஷ் கார்த்திக் 0, ஹார்திக் பாண்டியா 22, அஸ்வின் 10, முகமது சமி 2, இஷாந்த் சர்மா ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் சாம் கர்ரன் அபாரமாக பந்துவீசி 74 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டை வீழ்த்தி இந்தியாவின் சரிவுக்கு காரணமாக அமைந்தார்.
கேப்டன் விராட் கோலி தனி ஆளாக நின்று அபாரமாக ஆடி 225 பந்துகளில் 22 பவுண்டரியுடன் 149 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு துணையாக ஆடி வந்த இஷாந்த் 5 ரன்களில் அடில் ரஷித் பந்தில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணி 76 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 274 ரன்கள் எடுத்திருந்தது.
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் சாம் கர்ரன் அபாரமாக பந்துவீசி 74 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டை வீழ்த்தி இந்தியாவின் சரிவுக்கு காரணமாக அமைந்தார். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 13 ரன்கள் பின்தங்கி இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









