20 வயதுக்குட்பட்டோர் காட்டிஃப் கால்பந்து போட்டியில் இந்திய அணியிடம் 20 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 6 முறை உலக சாம்பியனான பலம் வாய்ந்த ஆர்ஜென்டீனா அணி 2-1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது.
ஸ்பெயினின் வலேன்சியாவில் காட்டிஃப் கால்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன. இந்திய இளம் வீரர்களுக்கு தேவையான ஆட்ட அனுபவத்தை வழங்கும் வகையில் பயிற்சியாளர் பிளாயிட் பிண்டோ தலைமையில் பல்வேறு அயல்நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது.
இப்போட்டியில் முர்சியாவிடம் 2-0, மெளரிடனியாவிடம் 3-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வியடைந்தது. அதே நேரத்தில் பலம் வாய்ந்த வெனிஸþலா அணியிடம் 0-0 என டிரா கண்டது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது.
தீபக் டங்கிரி, அன்வர் ஆகியோர் சிறப்பாக ஆடி கோலடித்தனர். தவறு புரிந்ததால் ஜாதவுக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதால் 10 வீரர்களுடனே இந்தியா ஆடியது. பதில் கோலடிக்க ஆர்ஜென்டீனா மேற்கொண்ட முயற்சிகளை இந்திய கோல்கீப்பர் பிரபுசுகான் கில் தடுத்தார்.
இந்த வெற்றி சிறப்பானது, இளம் கால்பந்து வீரர்களுக்கு அதிக தன்னம்பிக்கையை அளிக்கும். ஏஐஎப்எப் எடுத்து வரும் முயற்சிகளுக்கு மிகுந்த ஊக்கம் தருவதாக உள்ளது என பயிற்சியாளர் பிண்டோ கூறினார்.
இந்நிலையில் குரோஷியாவில் நடக்கவுள்ள 4 நாடுகள் போட்டிகள் இந்திய அணி அனுப்பப்பட உள்ளது என ஏஐஎப்எப் பொதுச் செயலர் குஷால் தாஸ் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரப்பான்பூச்சிகளால் ஸ்தம்பிக்கும் தில்லி... இன்றைய நேரலை (ஜூலை 22)

சிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை பாடலை தமிழ், தெலுங்கில் பாடிய ஸ்ரீ கௌரி ப்ரியா!







