/

நீதிமன்ற விசாரணை எதிரொலி: 3-வது டெஸ்டிலும் ஸ்டோக்ஸ் பங்கேற்பதில் சிக்கல்!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரிஸ்டல் இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தகராறில் இருவருடன் பென் ஸ்டோக்ஸ் தகராறில் ஈடுபட்டு தாக்கிக் கொண்டதாக...

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:29 pm

DIN

நீதிமன்ற வழக்கு விசாரணை எதிரொலியாக இந்தியாவுடன் நடக்கவுள்ள மூன்றாவது டெஸ்டிலும் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரிஸ்டல் இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தகராறில் இருவருடன் பென் ஸ்டோக்ஸ் தகராறில் ஈடுபட்டு தாக்கிக் கொண்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது அவரது துணை கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டது. இதற்கிடையே தற்போது தொடங்கியுள்ள இந்தியா டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்டில் ஸ்டோக்ஸ் அபாரமாக பந்துவீசி இங்கிலாந்தின் வெற்றிக்கு வித்திட்டார்.

இந்நிலையில் பிரிஸ்டல் நகர நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஸ்டோக்ஸ் ஆஜராகி வருகிறார். அவருடன் அப்போது தகராறில் ஈடுபட்ட ரேயான் அலி, ரேயான் ஹாலேயும் ஆஜராகி வருகிறார்கள். இந்த விசாரணை இந்த வாரம் புதன்கிழமை வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் நாளை மூன்றாவது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்படவுள்ளது. 

கடந்த வாரம் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் ஸ்டோக்ஸ் பங்கேற்கவில்லை. இதையடுத்து 18-ம் தேதி நாட்டிங்கமில் மூன்றாவது டெஸ்ட் தொடங்க உள்ள நிலையில் அதிலும் ஸ்டோக்ஸ் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கு விசாரணை புதன் அன்று முடிவடைவதால் சனிக்கிழமை தொடங்கும் டெஸ்ட் போட்டிக்கு ஸ்டோக்ஸால் தயாராக முடியாது என்று கூறப்படுகிறது. இந்த வழக்கு விசாரணையில் ஸ்டோக்ஸ் மீதான புகார் நிரூபிக்கப்பட்டால் அவரது கிரிக்கெட் எதிர்காலம் பாதிக்கப்படும் சூழலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.