சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

ஆசியக் கோப்பை கால்பந்து: ஜிஜே நம்பிக்கை

ஆசியக் கோப்பை கால்பந்து போட்டி 2019-இல் இந்தியா சிறப்பாக விளையாடும் என இளம் பார்வர்ட் வீரரான ஜிஜே லால்பெகுலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News image
Updated On :26 டிசம்பர் 2018, 2:52 am IST


ஆசியக் கோப்பை கால்பந்து போட்டி 2019-இல் இந்தியா சிறப்பாக விளையாடும் என இளம் பார்வர்ட் வீரரான ஜிஜே லால்பெகுலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வரும் ஜனவரி மாதம் ஐக்கிய அரபு அமீரக நாட்டில் இப்போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் இந்தியாவும், 8 ஆண்டுகளுக்கு பின் பங்கேற்கிறது. கேப்டன் சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணி ஏற்கெனவே அபுதாபியில் தங்கி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் ஜிஜே செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
அணியில் நான் சேரும் போதே சுனில் சேத்ரியுடன் இணைந்து ஆடி வருகின்றேன். மைதானத்திலும், வெளியிலும் எனக்கு பல உதவிகளை செய்துள்ளார் சேத்ரி. 
தாய்லாந்துடன் நடைபெறவுள்ளதொடக்க ஆட்டத்தில் கண்டிப்பாக நாங்கள் வெற்றி பெறுவோம். தற்போதைய அணி வலிமையுடன் உள்ளது. இதற்காக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டோம். எங்களுக்கு ஆசியக் கோப்பை தான் உலகக் கோப்பை போன்றுள்ளது. பயிற்சியாளர் கான்ஸ்டான்டைன் தலைமையில் அணி கட்டுக்கோப்பாக ஆடி வருகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.