ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்க அணிக்குப் புதிய கேப்டன்!

இரண்டு ஒருநாள் ஆட்டங்கள் மட்டுமே இதுவரை விளையாடியுள்ள எய்டன் மார்க்ரம் தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணியின் கேப்டனாக...

News image
Updated On :3 பிப்ரவரி 2018, 12:09 pm

எழில்

இரண்டு ஒருநாள் ஆட்டங்கள் மட்டுமே இதுவரை விளையாடியுள்ள எய்டன் மார்க்ரம் தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க கேப்டன் ஃபா டூபிளெஸ்ஸிஸ் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலிருந்து விலகியுள்ளார். இதேபோல காயம் காரணமாக முதல் 3 ஒருநாள் போட்டிகளிலிருந்து நட்சத்திர பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸும் விலகியுள்ளார். இதனால் ஃபர்ஹான் பெஹர்தீன், கிளாசென் ஆகிய இருவரும் தென் ஆப்பிரிக்க அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இதையடுத்து தென் ஆப்பிரிக்க கேப்டன் யார் என்கிற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் 23 வயது எய்டன் மார்க்ரம் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை 2 ஒருநாள் ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ள மார்க்ரம் தெ.ஆ. ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது ஆச்சர்யத்தை உருவாக்கியுள்ளது. 2014-ல் யு-19 உலகக் கோப்பைப் போட்டியின் சாம்பியனான தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டனாக இருந்தவர், மார்க்ரம்.

முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று ஆறு ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. நாளை 2-வது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.