ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களிலிருந்து தென் ஆப்பிரிக்க கேப்டன் விலகல்!

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலிருந்து...

News image
Updated On :3 பிப்ரவரி 2018, 10:49 am

எழில்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலிருந்து தென் ஆப்பிரிக்க கேப்டன் ஃபா டூபிளெஸ்ஸிஸ் விலகியுள்ளார். இதற்கு முன்பு நட்சத்திர பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ் முதல் 3 ஒருநாள் போட்டிகளிலிருந்து விலகினார். இதையடித்து ஃபா டூபிளெஸ்ஸிஸும் விலகியுள்ளார்.

3-வது டெஸ்டில், விராட் கோலி அளித்த கேட்ச்சைப் பிடிக்க முயலும்போது டி வில்லியர்ஸின் வலது கை விரலில் காயம் ஏற்பட்டது. காயம் சரியாகக் குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் ஆகும் என்பதால் டி வில்லியர்ஸ் ஒருநாள் தொடரின் முதல் மூன்று போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக  தென் ஆப்பிரிக்க கேப்டன் ஃபா டூபிளெஸ்ஸிஸ்ஸும் விலகியுள்ளார். அவர் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலிருந்து விலகியுள்ளார்.

இதையடுத்து ஃபர்ஹான் பெஹர்தீன், கிளாசென் ஆகிய இருவரும் தென் ஆப்பிரிக்க அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.