சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடுவது என்னை உத்வேகமூட்டும்: அஸ்வின் பேட்டி
பஞ்சாப் அணி உடையுடன் சேப்பாக்கம் மைதானத்துக்குள் நுழைவதையும் நான் விரும்புவேன்...


சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணிக்காக இதுவரை விளையாடிய அஸ்வின் இந்தமுறை பஞ்சாப் அணிக்குத் தேர்வாகியுள்ளார். அவரை ரூ. 7.60 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது.
இந்த ஐபிஎல் போட்டியில் மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து ஒரு பேட்டியில் அஸ்வின் கூறியதாவது:
ஐபிஎல் போட்டியில் லெக் ஸ்பின்னை முயற்சி செய்யவுள்ளேன். என்னுடைய திட்டங்களில் அதுவும் ஒன்று. என் வித்தைகளைப் பலப்படுத்த நான் முயற்சி செய்கிறேன். சென்னையில் லீக் கிரிக்கெட் விளையாடும்போது ஆஃப் ஸ்பின்னுடன் லெக் பிரேக் வகைப் பந்துகளை வீசுவது வழக்கம். ஆனால் பிரத்யேகப் பந்துவீச்சுக்காக பலவற்றை நான் தவிர்த்துவிட்டேன். 10 வருடங்களாக ஆஃப் ஸ்பின்னில் பந்துவீசி விட்டு அதை மாற்றமுயல்வது சவாலாக உள்ளது. இப்போதைக்கு எதைப் பற்றியும் இறுதி முடிவெடுக்கவில்லை. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இதுதான் என்று ஒரேடியாக முடிவெடுத்து பயணித்ததில்லை.
இந்த முயற்சி வலிமிகுந்ததாக உள்ளது. பயிற்சியின்போது ஒருநாள் லெக் ஸ்பின் சரியாக வருகிறது. இன்னொரு நாள் சரியாக வருவதில்லை என்று தன்னுடைய புதிய முயற்சி குறித்து கூறியுள்ள அஸ்வின், வரும் ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடாதது குறித்து வருத்தம் கொள்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
கடந்த 8 வருடங்களாக சென்னை அணிக்கு விளையாடியுள்ளேன். இந்த நிலையில் மீண்டும் சென்னை அணிக்காக விளையாட முடியாதது குறித்து வருத்தப்படுகிறேன். சேப்பாக்கம் மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை எனக்கானதாக உணர்ந்துள்ளேன். நான் பந்துவீச வரும்போது எழும் ரசிகர்களின் கரகோஷமும் பாராட்டுகளும் எப்போதும் நினைவில் நிற்கும். ஐபிஎல் ஏலத்தை யாரும் கணிக்கமுடியாது. பஞ்சாப் அணி உடையுடன் சேப்பாக்கம் மைதானத்துக்குள் நுழைவதையும் நான் விரும்புவேன். என் மண்ணின் ரசிகர்கள் முன்பு என் திறமையை நிரூபிக்கும் வாய்ப்பாக அதை உணர்வேன். இங்கு வந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடுவது என்னை மேலும் உத்வேகமூட்டும். பஞ்சாப் அணியின் கேப்டன் யார் என்பது குறித்து இன்னமும் முடிவாகவில்லை. தமிழ்நாட்டு அணியின் கேப்டனாக முன்பு நன்கு பணியாற்றியுள்ளேன். ஆனால் டி20-யில் கேப்டனாக இருந்ததில்லை. எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் அதிலும் சிறப்பாகப் பணியாற்றுவேன் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...