பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

இந்திய அணியின் பந்துவீச்சை நன்கு எதிர்கொண்ட ஆம்லா, ரபாடா!

தென் ஆப்பிரிக்க அணி 2-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது 31 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்துள்ளது...

News image
Updated On :25 ஜனவரி 2018, 10:43 am

எழில்

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 2-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது 31 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அந்நாட்டு அணியை 3 டெஸ்ட், 6 ஒரு நாள், 3 டி20 போட்டிகளில் எதிர்கொள்கிறது. முதலாவது டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. 2-ஆவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 135 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது அந்த அணி. இதனால், தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றும் இந்தியாவின் 26 ஆண்டு கனவு, இன்னும் கனவாகவே நீடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்கா முதல் 2 போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், 3-ஆவது போட்டி ஜோஹன்னஸ்பர்க்கில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்ய தீர்மானித்தது.

இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 77 ஓவர்களில் 187 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அணியின் பெரும்பாலான விக்கெட்டுகள் ஒற்றை இலக்க ரன்னிலும், டக் அவுட்டிலுமாக அடுத்தடுத்து வீழ, முதல் நாளிலே இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் ககிசோ ரபாடா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளும், மோர்னே மோர்கெல், பிலாண்டர், பெலுக்வாயோ தலா 2 விக்கெட்டுகளும், கிடி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா, முதல்நாள் முடிவில் 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 6 ரன்கள் எடுத்தது. டீன் எல்கர் 4 ரன்களுடனும், ரபாடா ரன்கள் இன்றியும் களத்தில் இருந்தார்கள். முன்னதாக மார்க்ரம் 2 ரன்களில் வீழ்ந்தார். அவரை, கீப்பர் பார்த்திவ் படேல் உதவியுடன் புவனேஷ்வர் குமார் வீழ்த்தினார்.

இந்நிலையில் இன்று ஆட்டம் தொடங்கியவுடன் டீன் எல்கரை 4 ரன்களில் வெளியேற்றினார் புவனேஸ்வர். இதன்பிறகு ஜோடி சேர்ந்த ஆம்லா - ரபாடா இந்திய அணியின் பந்துவீச்சைத் திறமையாகக் கையாண்டார்கள். குறைந்த ரன்களில் தென் ஆப்பிரிக்காவை ஆட்டமிழக்கச் செய்துவிடலாம் என்கிற இந்திய அணியின் கனவைத் தகர்த்தார்கள். ஆம்லா சற்று விரைவாக ரன்கள் சேர்த்தார். ரபாடாவின் விக்கெட்டையாவது கைப்பற்றலாம் என்கிற இந்திய அணியின் விருப்பமும் நிறைவேறாமல் போனது. 84 பந்துகளை எதிர்கொண்ட ரபாடா, 30 ரன்கள் எடுத்த நிலையில் உணவு இடைவேளைக்கு முன்பு இஷாந்த் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

Story image

தென் ஆப்பிரிக்க அணி 2-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது 31 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்துள்ளது. ஆம்லா 32 ரன்களுடனும் டி வில்லியர்ஸ் ரன்கள் இன்றியும் களத்தில் உள்ளார்கள். ஏழு விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 106 ரன்கள் பின்தங்கியுள்ளது. இன்றைய நாளின் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியின் ஸ்கோரைத் தாண்டி முன்னிலை பெறும் என்கிற எதிர்பார்ப்பை இந்த நாளின் முதல் பகுதி உருவாக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.