உலகின் நம்பர் 1 இடத்தை, விளையாட்டுகளில் பிடிப்பது கஷ்டம். அதை விட சிரமம் அதைத் தக்க வைத்துக் கொள்வது. இந்த விஷயத்தில் மூன்று வீராங்கனைகள் என்ன சொல்கிறார்கள்:
தீபிகாகுமாரி: பிரபல வில்வித்தை வீராங்கனை தீபிகாகுமாரி, உலகின் நம்பர் 1 வீராங்கனையாக, வில் வித்தையில் இருக்கிறார். ஆனால், அதனை தக்கவைத்துக் கொள்ள எவ்வளவு மன அழுத்தத்தை தாங்கிக் கொள்ள வேண்டியுள்ளது என அவர் சமீபத்தில் ஆதங்கப்பட்டிருக்கிறார்.

சாய்னா நேவால்: பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் 2015 -ஆம் ஆண்டு இரண்டு தங்கப்பதக்கம், 3 வெள்ளிப் பதக்கங்களை வென்றதின்மூலம், பேட்மிண்டன் உலகின் முதல் நிலை வீராங்கனையாக உயர்ந்தார். இருந்தும் அந்த ஆண்டில் மட்டும் மூன்று முறை இவர் ரேங்கில் ஏறி இறங்க வேண்டி வந்தது. காரணம் காயம் பட்டதால். உண்மையில் இன்று இவருடைய ரேங்க் 10. "நீங்கள் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக இருந்தவராச்சே இனி வரப்போகும் போட்டிகளில் எப்படி'' எனக் கேட்டால், ஜெயிப்பது தான் முக்கியம். உலகின் முதல் நபராக இருப்பது முக்கியமல்ல'' என்கிறார் சாய்னா.

சைமோனா ஹாலெப்: ரோமானிய நாட்டின் டென்னிஸ் வீராங்கனை சைமோனா ஹாலெப் கடந்த ஆண்டு டென்னிஸ் உலகின் வீராங்கனைகளில் உலக அளவில் முதல் இடம் பெற்றார். "முதலிடத்தைப் பிடித்தாலும் நீண்ட நாள்கள் இதை தக்க வைப்பது கடினம். மற்ற போட்டிகளில் வென்றாலும் முதல் இடம் பெறலாம் என்கிற போது, முதல் இடம் பற்றி எனக்கு ஏன் கவலை'' எனகிறார் சைமோனா ஹாலெப்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தலைப் புறக்கணித்த வேங்கைவயல் மக்கள்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!
ஜனநாயகக் கடமையாற்றிய திரை பிரபலங்கள்!

அரசியலுக்கு வந்தால் விமர்சனங்கள் இருக்கும்! வாக்களித்த பிறகு சிம்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


