அண்மையில் நடைபெற்ற சென்னை மாவட்ட கால்பந்து சங்க நிர்வாகிகள் தேர்தல் செல்லாது என தமிழ்நாடு கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு கால்பந்து சங்க தலைவர் ஜே.ஜேசையா வில்லவராயர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
மாவட்ட கால்பந்து சங்கங்கள் முறைப்படி செயல்படுகிறதா என்பதனை கண்காணிக்கும் பொறுப்பு மாநில கால்பந்து சங்கத்திற்கு உண்டு. மாவட்ட சங்கங்களுக்கு முன்னுதாரணமாக திகழவேண்டிய சென்னை மாவட்ட கால்பந்து சங்கத்தில் பல்வேறு பிரச்னைகள், பல வழக்குகள் என இன்றும் தொடர்ந்து வருகிறது.
சில வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் சென்னை மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டது. வழக்குகள் நிலுவையில் இருக்கும் நேரத்தில் இந்த தேர்தல் அவசியமில்லாத ஒன்று. அதோடு விதிகளுக்கும் புறம்பானது.
ஆண்டுப்பொதுக்குழுவும் அதில் நிர்வாகிகள் தேர்தலும் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டபிறகு அதற்கான இறுதிபட்டியல் கடந்த 23.06.2018 வெளியிடப்பட்டது. அதில் கால்பந்து சங்க நிர்வாகத்தில் இருந்து விலக்கிவைக்கப்பட்டுள்ள இ.சுகுமாறனின் பெயர் இல்லை. ஆனால், தேர்தல் நடைபெற்ற 30.06.2018 அன்று சுகுமாறனின் பெயர் சேர்க்கப்பட்டு அவர் செயலாளராக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருசில குளறுபடிகளால் வாக்குரிமை பெற்றிருந்த ஷைனிவில்சன்(எப்.சி.ஐ.), எம்.இளங்கோ(தமிழ்நாடு காவல்துறை, டி.சி.ஜெப்ரி(கணபதி எப்.சி.), சௌந்திரராஜன் (சென்னை மாநகரக் காவல்) ஆகியோர் வாக்களிக்க மறுக்கப்பட்டனர். தேர்தல் பார்வையாளர் நீதிபதி வாசுகியும் இந்த தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்படவில்லை. ஆகவே, சென்னை மாவட்ட கால்பந்து சங்க நிர்வாகிகள் தேர்வுக்காக நடந்த தேர்தல் செல்லாது என்றார் ஜேசையா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சர்வதேச டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவின் எதிர்காலம் என்ன?

ஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் முதல் பெண் பயிற்சியாளர்!

பிகார் புதிய முதல்வராக சாம்ராட் செளதரி தேர்வு!

தவெக பிரசாரத்தில் மயங்கிய திருப்பூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு

