பிரெஞ்சு ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்று ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீராங்கனை சிமோனா ஹலேப் யுஎஸ் ஓபன் சாம்பியன் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் ஆகியோர் மோதுகின்றனர்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி தற்போது அரையிறுதி, இறுதிச் சுற்றை நெருங்கியுள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற மகளிர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் சிமோனோ ஹலேப்பும், முன்னாள் சாம்பியன் முகுருஸாவும் மோதினர்.
இதில் 6-1, 6-4 என எளிதில் வென்று சிமோனா இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் அவர் தனது முதல்நிலை அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டார்.
இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. மூன்றாவது முறையாக பிரெஞ்ச் ஓபன் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளேன். இது மனதுக்கு ஊக்கத்தை தந்துள்ளது என்றார் சிமோனா.
ஸ்லோன் வெற்றி: மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்க நாட்டு வீராங்கனைகள் ஸ்லோன் ஸ்டீபன்ஸ்-மடிசன் கீய்ஸ் ஆகியோர் மோதினர்.
இதில் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்லோன் வெற்றி பெற்றார். எனது நெருங்கிய தோழிக்கு எதிராக ஆடுவது கடினமானது. எனினும் இதில் முதன்முறையாக இறுதிக்கு தகுதி பெற்றது மகிழ்ச்சி தருகிறது என்றார் ஸ்லோன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








