சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

போர்ச்சுகல்-ஈரான் டிரா (1-1)

வலுவான போர்ச்சுகல் அணிக்கும், ஈரான் அணிக்கும் இடையிலான ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது.

News image

கோல் அடித்த மகிழ்ச்சியில் ரிக்கார்டோ குரேஸ்மா, ரொனால்டோ

Updated On :30 ஜனவரி 2024, 9:33 pm IST

வலுவான போர்ச்சுகல் அணிக்கும், ஈரான் அணிக்கும் இடையிலான ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது.
குரூப் பி பிரிவைச் சேர்ந்த போர்ச்சுகல்-ஈரான் அணிகள் இடையிலான ஆட்டம் திங்கள்கிழமை நள்ளிரவு சரன்ஸ்க் நகரில் நடைபெற்றது.
இப்பிரிவில் போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகியவை தலா 4 புள்ளிகளுடன், ஈரான் 3 புள்ளிகளுடனும் உள்ளன. வலுவான போர்ச்சுகல் முதல் ஆட்டத்தில் ஸ்பெயினுடன் டிரா செய்தது. அதே நேரத்தில் மொராக்கோவை வென்றது. ஈரானும் மொராக்கோவை வீழ்த்தியது. இதனால் மொராக்கோ வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில் இந்த பிரிவில் இருந்து நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறுவது யார் என்பதை நிர்ணயிக்கும் ஆட்டம் என்பதால் பரபரப்பாக நடைபெற்றது. 
ஆட்டம் தொடங்கியது முதலே போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஈரான் தற்காப்பு அரணை ஊடுருவி கோலடிக்க முயன்றார். ஈரான் அணியினரும் பதிலுக்கு கோல் போட முயன்றனர். இதற்கிடையே 45-ஆவது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் அட்ரியன் சில்வா கடத்தி அனுப்பிய பந்தை ரிக்கார்டோ குரேஸ்மா 18 அடி தூரத்தில் இருந்து அற்புதமாக கோலாக்கினார். முதல் பாதி நிறைவில் போர்ச்சுகல் 1-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாம் பாதி தொடங்கியதும் 53-வது நிமிடத்தில் தனக்கு கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பை கோலாக்காமல் தவற விட்டார் ரொனால்டோ. ஆட்டம் முடிய கூடுதல் நேரத்தில் கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பு மூலம் ஈரான் வீரர் கரீம் அன்சாரி பார்ட் கோலடித்தார்.
இதனால் ஆட்டம் 1-1 ஆட்டம் டிராவில் முடிந்தது.
இந்த டிராவால் போர்ச்சுகல், ஈரான் அணிகளுக்கு தலா 1 புள்ளி கிடைத்தது. எனினும் 5 புள்ளிகளுடன் போர்ச்சுகல் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. அதே நேரத்தில் ஈரான் 4 புள்ளிகளுடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.
ஈரான் ரசிகர்களிடம் ரொனால்டோ கெஞ்சல்:
போர்ச்சுகல் தரப்பில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிரண்டு ஆட்டங்களில் வெற்றியைத் தேடித்தந்தார். 
இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை இரவு போர்ச்சுகல் வீரர்கள் தங்கியிருந்த ஓட்டல் முன்பு கூடிய ஏராளமான ஈரான் ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் மிகுந்த கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். இதனால் தூக்கமின்றி பாதிக்கப்பட்ட வீரர் ரொனால்டோ ஜன்னல் அருகே வந்து தங்களை தூங்க விடுமாறு ஈரான் ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.