பிரபல கால்பந்து வீரர் நெய்மருக்கு அறுவைச் சிகிச்சை

பிரேஸிலைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் நெய்மர் (26) கணுக்காலில் அறுவைச் சிகிச்சை செய்துகொள்ள உள்ளார்.
பிரபல கால்பந்து வீரர் நெய்மருக்கு அறுவைச் சிகிச்சை
Updated on
1 min read

பிரேஸிலைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் நெய்மர் (26) கணுக்காலில் அறுவைச் சிகிச்சை செய்துகொள்ள உள்ளார்.
பிரான்ஸில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரெஞ்ச் கோப்பை லீக் கால்பந்து போட்டி ஒன்றில் மார்சில்லே கிளப் அணியை பிஎஸ்ஜி அணி எதிர்கொண்டது. பிஎஸ்ஜி அணியில் விளையாடி வரும் பிரேஸிலைச் சேர்ந்த வீரர் நெய்மருக்கு அந்த ஆட்டத்தில் கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்நிலையில், அவருக்கு இந்த வார இறுதியில் பிரேஸிலில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட உள்ளதாக பிஎஸ்ஜி அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
'சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட போட்டியில் அடுத்த வாரம் ரியல் மாட்ரிட் அணியை எதிர்கொள்ள உள்ள நிலையில், நெய்மர் அணியில் இல்லாதது வருத்தம் அளிக்க செய்கிறது; இருப்பினும், அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட வேண்டியுள்ளது' என்று அணி நிர்வாகம் கூறியுள்ளது. இவர், அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் ஆவார். அடுத்த 6 முதல் 8 வாரங்கள் வரை நெய்மர் ஓய்வெடுக்க வேண்டி இருப்பதாக அவரது தந்தை தெரிவித்தார்.
இதனிடையே, வியாழக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மார்சில்லே அணிக்கு எதிராக 3-0 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்கு பிஎஸ்ஜி தகுதி பெற்றது.
முன்னதாக, அந்த அணிக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்திலும் பிஎஸ்ஜி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com