எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

தோனியிடமிருந்து கற்றுக்கொண்ட திறமை இது: தினேஷ் கார்த்திக்

ஓர் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் வித்தையை தோனியிடமிருந்து கற்றுக்கொண்டேன் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்...

News image
Updated On :19 மார்ச் 2018, 11:46 am

எழில்

ஓர் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் வித்தையை தோனியிடமிருந்து கற்றுக்கொண்டேன் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

நிடாஹஸ் கோப்பை முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா வங்கதேசத்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் ஆனது.

இந்தியா, இலங்கை, வங்கதேச அணிகள் பங்கேற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்றது. இத்தொடரின் இறுதி ஆட்டத்துக்கு இந்தியா-வங்கதேசம் அணிகள் முன்னேறின. கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து வென்றது.

ரோஹித் சர்மா ரன்கள் குவித்தும் தோல்வியை தழுவும் நிலைக்கு சென்றது இந்திய அணி. எனினும், அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி அணியை "த்ரில்' வெற்றி பெறச் செய்தார்.

தன்னுடைய ஆட்டம் குறித்து தினேஷ் கார்த்திக் கூறியதாவது:

இதுபோன்ற ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை அனுபவத்தின் பலனாகக் கிடைப்பது என நினைக்கிறேன். இத்திறமைகளை விலைக்கு வாங்கமுடியாது. அனுபவத்தின் காரணமாகவே  கற்றுக்கொள்ள முடியும். இதுபோன்ற இக்கட்டான தருணங்களை நிதானமாகக் கையாள வேண்டும். இதற்கு தோனியின் ஆட்டங்கள் சிறந்த உதாரணம். அவர் எவ்வளவு நிதானத்துடன் கையாள்வார் என்பதைப் பார்த்துள்ளோம். இவரைப் போன்றவர்களிடமிருந்து நீங்கள் நிறைய கற்றுக்கொள்ள முடியும். ஒரு ஆட்டத்தை எப்படி வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்பதை தோனியிடமிருந்து கற்றுக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.