டி20: இந்திய அணி 152 ரன்கள்!
இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மகளிர் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று தொடங்கியுள்ளது...


இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மகளிர் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று தொடங்கியுள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் இந்திய-ஆஸ்திரேலிய அணிகள் மோதி வருகின்றன.
இந்திய அணியை பொருத்த வரையில் சமீபத்தில் இதே ஆஸ்திரேலிய அணியிடம் ஒருநாள் தொடரை 0-3 என முழுமையாக இழந்துள்ளது. எனினும், அதற்கு முன்பாக தென் ஆப்பிரிக்காவுடனான டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. மந்தனா 30 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். மிதாலி ராஜ் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு 67 ரன்களில் மந்தனா வெளியேறினார். அனுஜா பாட்டீல் 20 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...