ஐசிசி ஒருநாள் தரவரிசை: இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு முன்னேறிய இங்கிலாந்து அணி!
2015 உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு சிறப்பாக விளையாடி வரும் இங்கிலாந்து ஒருநாள் அணி, ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இதற்கு முன்பு முதலிடத்தில் இருந்த இந்திய அணி, இரண்டாம் இடத்துக்கு இறங்கியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவை 4-1 என்ற கணக்கிலும் நியூஸிலாந்தை 3-2 என்ற கணக்கிலும் இங்கிலாந்து அணி தோற்கடித்தது. இதற்கு முன்பு ஜனவரி 2013-ல் இங்கிலாந்து அணி தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது.
மூன்று முதல் ஐந்தாவது இடங்களை தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பெற்றுள்ளன. 12-வது இடத்தை அயர்லாந்து அணி பிடித்துள்ளது.
டி20 தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் அணி முதலிடத்தில் நீடிக்கிறது. இந்திய அணி மூன்றாம் இடத்தில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.