வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

இன்று இரண்டாவது ஆட்டம்: டி20 தொடரையும் வெல்ல இந்திய அணி தீவிரம்

மே.இ.தீவுகளுடனான டி20 தொடரையும் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது இந்திய அணி.இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும்

News image

தீவிர ஆலோசனையில் ரோஹித், ரவி சாஸ்திரி.

Updated On :6 நவம்பர் 2018, 12:59 am IST


மே.இ.தீவுகளுடனான டி20 தொடரையும் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது இந்திய அணி.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் மே.இ.தீவுகள் ஏற்கெனவே டெஸ்ட் தொடரை 2-0 எனவும், ஒரு நாள் தொரை 3-1 எனவும் இந்தியாவிடம் இழந்தது. தற்போது இறுதிக் கட்டமாக டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
டி20 உலகக் கோப்பையில் இரண்டு முறை சாம்பியனான மே.இ.தீவுகள் இத்தொடரை வெல்லும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இரண்டாவது ஆட்டம்: இதன் தொடர்ச்சியாக லக்னெளஏகனா மைதானத்தில் 24 ஆண்டுகள் கழித்து முதல் சர்வதேச போட்டியாக இரண்டாவது டி20 ஆட்டம் செவ்வாய்க்கிழமை நடக்கிறது. கடந்த 2014-இல் வங்கதேசத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் மே.இ.தீவுகளை கடைசியாக வென்றிருந்தது இந்தியா. அதன் பின்னர் நடைபெற்ற 4 ஆட்டங்களிலும் தோல்வியுற்றது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தினேஷ் கார்த்திக்கின் சிறப்பான ஆட்டத்தால் முதல் ஆட்டத்தில் இந்தியா வென்றது. கடந்த 2009 முதல் 2018 காலகட்டத்தில் 9 முறை மோதியதில் மே..இ தீவுகள் 5 முறையும், இந்தியா 3 முறையும் வென்றுள்ளன.
கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ள ரோஹித் சர்மா முதல் ஆட்டத்தில் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இரண்டாவது ஆட்டத்தில் அவர் ரன் குவிப்பில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தினேஷ் கார்த்திக்-க்ருணால் பாண்டியா இணை இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டது. பேட்டிங்கில் தவன், ராகுல், பந்த் ஆகியோர் சோபிக்கவில்லை. 
அதே நேரத்தில் பெளலிங்கில் குல்திப் யாதவ், க்ருணால் பாண்டியா, பும்ரா, கலீல் அகமது ஆகியோர் தங்கள் இருப்பை வெளிப்படுத்தினர்.
ஆறுதல் வெற்றியைத் தேடும் மே.இ.தீவுகள்: டெஸ்ட், ஒரு நாள் ஆட்டத் தொடரை இழந்த மே.இ.தீவுகள் 2 மாதங்கள் சுற்றுப்பயணத்துக்கு பின் டி20 தொடரை வென்று ஆறுதல் வெற்றியுடன் ஊர் திரும்ப முடியுமா என்ற எண்ணத்தில் உள்ளது. டி20 ஆட்டத்துக்கு பிரபலமான பொல்லார்ட், பிரேவோ ஆகியோர் இடம் பெற்றும் அந்த அணியின் ஆட்டத்தில் எந்த மாறுதலும் கிட்டவில்லை. மற்றொரு நட்சத்திர வீரரான ரஸ்ஸல், நர்ஸ் ஆகியோர் காயமுற்றதும் பின்னடைவாகி விட்டது.
நட்சத்திர பேட்ஸ்மேன்கள் ஷேய் ஹோப், ஷிம்ரன் ஹெட்மயர் சோபிக்காதது அந்த அணியால் ரன்களை குவிக்க முடியாமல் செய்து விட்டது.
பெளலிங்கில் ஓஷேன் தாமஸ் அபாரமாக பந்துவீசினாலும், அவருக்கு மற்றவர்கள் உறுதுணையாக செயல்படவில்லை. கேப்டன் பிராத்வொயிட் சிறப்பாக பந்துவீசினாலும்பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை.
அணிகள்: இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவன், கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக், மணிஷ் பாண்டே, ஷிரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், க்ருணால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், சஹால், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், பும்ரா, கலீல் அகமது, உமேஷ் யாதவ், ஷபாஸ் நதீம்.
மே.இ.தீவுகள்: கார்லோஸ் பிராத்வொயிட் (கேப்டன்), டேரன் பிரேவோ, ஷிம்ரன் ஹெட்மயர், ஷேய் ஹோப், ஓஷேன் தாமஸ், ஓபேட் மெக்காய், கீமோ பால், கேரி பியரி, பொல்லார்ட், நிக்கோலஸ் பூரன், ரோவ்மேன் பொவல், தினேஷ் ராம்தின், ரூதர்போர்ட்.
ஆட்டம் இந்திய நேரப்படி இரவு மணிக்கு தொடங்குகிறது.

ரன் சேஸுக்கு கடினமாக இருக்கும் லக்னெள ஆடுகளம்

இந்தியா-மே.இ.தீவுகள் இடையே இரண்டாவது டி20 ஆட்டம் நடக்கவுள்ள லக்னெள ஏகனா மைதான பிட்ச் (ஆடுகளம்) ரன் சேஸுக்கு கடினமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த மைதானத்தில் முதல் சர்வதேச ஆட்டம் செவ்வாய்க்கிழமை நடக்கிறது. முதலில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்ச் அமைக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது பேட்டிங், பௌலிங் என இரு தரப்புக்கும் சாதகமாக அமைக்கப்பட்டுள்ளது.
இரவில் மின்னொளியில் ஆட்டம் நடைபெறும் போது, பனிமூட்டம் காரணமாக இரண்டாவதாக பீல்டிங் செய்யும் அணிக்கும், பெளலர்களுக்கும் சிரமம் ஏற்படும். பவுண்டரிகள் அடிப்பதிலும் சிக்கல் ஏற்படும் எனத்தெரிகிறது. மாலை 5.30 மணிக்கே பனிமூட்டம் தொடங்கி விடுவதால், ஆட்டத்தின் போக்கில் மாற்றங்கள் ஏற்படக்கூடும்.
130-க்கு மேல் ஸ்கோர் இருந்தால் சேஸ் செய்வது கடினமாக இருக்கும். மொத்தம் 50 ஆயிரம் பேர் அமரக்கூடிய வசதி கொண்ட இதில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று விட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.