எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

3-வது டி20: ஆஸ்திரேலிய அணியில் பிரபல வீரர் சேர்ப்பு!

காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து விலகியுள்ள பில்லி ஸ்டேன்லேக்-குக்குப் பதிலாக பிரபல வீரர்...

News image
Updated On :24 நவம்பர் 2018, 5:01 am

எழில்

கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளது.

முதல் டி20 ஆட்டத்தை ஆஸ்திரேலியா அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. நேற்று நடைபெற்ற 2-வது டி20 ஆட்டத்தில் ஆஸி. அணி 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன்களை எடுத்தது. ஆனால் இடையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டதால் 11 ஓவர்களாக குறைக்கப்பட்டு 90 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பிறகு 5 ஓவர்களாகவும் குறைக்கப்பட்டது. ஆனால் தொடர் மழையால் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. டி20 தொடரில் 1-0 என ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகித்து வருகிறது. கடைசி டி20 ஆட்டம் ஞாயிறன்று சிட்னியில் நடைபெறவுள்ளது. இதற்குப் பிறகு டெஸ்ட் தொடர் டிசம்பர் 6 அன்று தொடங்கவுள்ளது. 

இந்நிலையில், காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து விலகியுள்ள பில்லி ஸ்டேன்லேக்-குக்குப் பதிலாக பிரபல வீரர் மிட்செல் ஸ்டார்க் கடைசி டி20 ஆட்டத்துக்குச் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் கடைசியாக 2016 செப்டம்பரில் சர்வதேச டி20 ஆட்டத்தில் விளையாடினார். அதன்பிறகு நாளைதான் ஆஸி. அணியில் இடம்பெறவுள்ளார். மேலும் ஆஸ்திரேலிய மண்ணில் 2014 பிப்ரவரியில் கடைசியாக சர்வதேச டி20-யில் விளையாடினார். டெஸ்ட் போட்டியில் அதிகக் கவனம் செலுத்துவதால் டி20 ஆட்டங்களில் ஸ்டார்க் அதிகக் கவனம் செலுத்துவதில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.