ஆர்ஜென்டீனாவில் நடைபெற்று வரும் யூத் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றது.
பியூனோஸ் அயர்ஸ் நகரில் 6-ஆம் தேதி யூத் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கின. இதில் இந்தியா சார்பில் 13 விளையாட்டுகளில் 47 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். மகளிர் ஜூடோ 44 கிலோ எடைப்பிரிவில் ஆசிய கேடட் சாம்பியன் தபாபி தேவியும், வெனிஸுலாவின் மரியா ஜிர்மன்ஸும் மோதினர். இதில் 11-0 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்த தபாபி தேவி வெள்ளி பதக்கம் வென்றார்.
யூத் ஒலிம்பிக்கில் ஜூடோவில் இந்தியா வெல்லும் முதல் பதக்கமாகும். துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு முதல் வெள்ளியை துஷார் மானே வென்றார்.
இந்நிலையில் திங்களகிழமை மகளிர் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் மெஹுலி கோஷ் 248.0 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார். தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட மெஹுலி, டென்மார்க்கின் ஸ்டெபானியிடம் தோல்வியடைந்தார்.
ஹாக்கியில் வெற்றி
18 வயதுக்குட்பட்டோர் மகளிர் ஹாக்கியில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வென்றது. லால்ரேமிசியாமி 2, சலீமி டேட், மும்தாஸ் கான் தலா 1 கோலை அடித்தனர். யூத் ஒலிம்பிக்கில் 20 நிமிடங்கள் கால அளவுடன் 5 வீரர்கள் முறையில் போட்டி நடக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 1 2026) 12 ராசிகளுக்கும்! விருச்சிக ராசிக்கு மகிழ்ச்சி!

கடக ராசிக்கு இன்று எப்படி? இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 01)

அவசர கோலத்தின் அவலம்!

மியான்மரில் வெடி விபத்து: 46 போ் பலி
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



