ரிச்சர்ட்ஸ் சாதனையைத் தாண்டுவாரா கோலி? மலைக்க வைக்கும் புள்ளிவிவரங்கள்!

இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 500 ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார்...
ரிச்சர்ட்ஸ் சாதனையைத் தாண்டுவாரா கோலி? மலைக்க வைக்கும் புள்ளிவிவரங்கள்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 6-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 6 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரை 5-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்தியா ஒருநாள் தொடரை வென்றது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

செஞ்சுரியனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 46.5 ஓவர்களில் 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய இந்தியா 32.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்து வென்றது. தென் ஆப்பிரிக்க இன்னிங்ஸின் போது ஷர்துல் தாக்குர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியும், இந்திய இன்னிங்ஸின்போது கேப்டன் கோலி 129 ரன்கள் விளாசியும் அணியின் வெற்றிக்கு அடிக்கோலினர். கோலி 19 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 129 ரன்களுடனும், ரஹானே 34 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கோலி ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருது வென்றார்.

* இது விராட் கோலியின் 35-வது ஒருநாள் சதம். 208 ஒருநாள் ஆட்டங்களில் 9588 ரன்கள் எடுத்துள்ளார்.

* இந்த ஒருநாள் தொடரில் கோலி எடுத்த ரன்கள்: 112, 46*, 160*, 75, 36, 129*. மூன்றாவது முறையாக தொடர் நாயகன் விருதைப் பெற்றுள்ளார்.

* இலக்கை விரட்டும்போது எடுத்த 21-வது சதம். வெளிநாடுகளில் அவருடைய 21-வது சதம். கேப்டனாக இருந்து எடுத்துள்ள 13-வது சதம். தென் ஆப்பிரிக்காவில் இது அவருடைய மூன்றாவது சதம். கோலி எடுத்த சதங்களில் வெற்றியைத் தேடித்தந்த 30-வது சதம். சச்சினுக்கு 33 வெற்றிகரமான சதங்கள் உண்டு. அதையும் கோலி விரைவில் தாண்டிவிட வாய்ப்புண்டு.

* தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மொத்தமாக கோலி 558 ரன்கள் விளாசியுள்ளார். இதன்மூலமாக, இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 500 ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். முன்னதாக, சகநாட்டவரான ரோஹித் சர்மா கடந்த 2013-14 காலகட்டத்தில் இந்தியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 6 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 491 ரன்கள் விளாசியதே அதிகபட்சமாக இருந்தது.

* அடுத்து நடைபெறவுள்ள டி20 தொடரில் கோலி 156 ரன்கள் எடுத்துவிட்டால் தென் ஆப்பிரிக்கச் சுற்றுப்பயணத்தில் 1000 ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையை அடைவார். இதற்கு முன்பு ஒரேயொரு பேட்ஸ்மேன் மட்டுமே ஒரு சுற்றுப்பயணத்தில் 1000 ரன்கள் எடுத்துள்ளார்.

1976-ல் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்த மே.இ. வீரர் விவ் ரிச்சர்ட்ஸ், டெஸ்டுகளில் 829 ரன்களும் ஒருநாள் தொடரில் 216 ரன்களும் என ஒட்டுமொத்த அந்தச் சுற்றுப்பயணத்தில் மட்டும் 1045 ரன்கள் எடுத்து சாதனை புரிந்தார். அதை டி 20 தொடரில் தாண்டிச் செல்வாரா கோலி?

அதிக ஒருநாள் சதங்கள்

சச்சின் - 49 (452 இன்னிங்ஸ்)
 கோலி - 35 (200)
 பாண்டிங் - 30 (365)

ஜெயசூர்யா - 28 (433)

ஆம்லா - 26 (161)

அதிக சர்வதேச சதங்கள் (டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றும் சேர்த்து) 

சச்சின் - 100
பாண்டிங் - 71

சங்கக்காரா - 63
காலிஸ் - 62

கோலி - 56

குறைந்த இன்னிங்ஸில் 9500 ஒருநாள் ரன்கள்

200 விராட் கோலி
215 டி வில்லியர்ஸ்
246 கங்குலி
247 டெண்டுல்கர்
256 தோனி

அதிவேக சர்வதேச 17,000 ரன்கள்

கோலி - 363 இன்னிங்ஸ்
ஆம்லா - 381 இன்னிங்ஸ்
( ஆம்லா, 363 இன்னிங்ஸில் 16,000 ரன்களே எடுத்தார்!)

அதிக ஒருநாள் ரன்கள் - இந்திய வீரர்கள்

சச்சின் - 18426 ரன்கள் (452 இன்னிங்ஸ்)
கங்குலி - 11221 ரன்கள் (297)
டிராவிட் - 10768 ரன்கள் (314)
தோனி - 9793 ரன்கள் (269)
கோலி - 9588 ரன்கள் (200)

இன்னிங்ஸ்/ சர்வதேச சதங்கள் (குறைந்தபட்சம் 30 சர்வதேச சதங்கள்) 

6.48 - விராட் கோலி
7.35 - ஆம்லா
7.42 - ஸ்டீவ் ஸ்மித்
7.82 - டெண்டுல்கர் 
8.69 - வார்னர்

கேப்டனாக அதிக ஒருநாள் சதங்கள் எடுத்தவர்கள்

22 - பாண்டிங் (220 இன்னிங்ஸ்)

13 - விராட் கோலி (46), டி வில்லியர்ஸ் (98)

11 - கங்குலி (143)
10 - ஜெயசூர்யா (118)

விராட் கோலியின் பேட்டிங் சராசரி

53.40 - டெஸ்டுகள் 

58.10 - ஒருநாள் போட்டிகள்
 
52.86 - டி20 போட்டிகள்

விராட் கோலியின் 35 ஒருநாள் சதங்கள்

இந்தியாவில் - 14 சதங்கள்

வங்கதேசத்தில் - 5 சதங்கள்

ஆஸ்திரேலியாவில் - 4 சதங்கள் 

இலங்கையில் - 4 சதங்கள் 
தென் ஆப்பிரிக்காவில் - 3 சதங்கள் 
மேற்கிந்தியத் தீவுகளில் - 2 சதங்கள் 
இங்கிலாந்து/நியூஸிலாந்து/ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் - தலா 1 சதம்

விராட் கோலி: 2018 தென் ஆப்பிரிக்கச் சுற்றுப்பயணம் 

டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் (286)
ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் (558)

இந்தியா - தென் ஆப்பிரிக்கா தொடர்: டெஸ்ட் & ஒருநாள்

விராட் கோலி - 844 ரன்கள்
ஆம்லா - 357 ரன்கள்
தவன் - 355 ரன்கள்
டு பிளெஸ்ஸிஸ் - 303 ரன்கள்

* ஒரு தொடரில் மூன்று சதங்கள் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலில் கோலியும் இடம்பெற்றுள்ளார். ஆனால் இருதரப்பு ஒருநாள் தொடரில் 3 சதங்கள் எடுத்த முதல் இந்தியர் - கோலி.

உலகக் கோப்பை 2003 (தெ.ஆ.) - கங்குலி - 3 சதங்கள்
விபி சீரீஸ் 2004 (ஆஸ்திரேலியா) - லட்சுமணன் - 3 சதங்கள்
ஒருநாள் தொடர் 2018 (தெ.ஆ.) - விராட் கோலி - 3 சதங்கள்

குறைந்த ஒருநாள் ஆட்டங்களில் 100 கேட்சுகள்

கோலி - 208 ஒருநாள் ஆட்டங்கள்
ரெய்னா - 223
அசாருதீன் - 231
டிராவிட் - 283
டெண்டுல்கர் - 333 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com