இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சீனாவின் லின் டானைத் தோற்கடித்தார் இந்தியாவின் பிரணாய்!

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் ஹெச். எஸ். பிரணாய், சீனாவின் லின் டானைத் தோற்கடித்துள்ளார். 

News image
Updated On :20 ஆகஸ்ட் 2019, 12:30 pm

எழில்

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் ஹெச். எஸ். பிரணாய், சீனாவின் லின் டானைத் தோற்கடித்துள்ளார். 

ஸ்விட்சர்லாந்தின் பேஸல் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் 2-வது சுற்றில் 5 தடவை சாம்பியன் பட்டத்தை வென்ற சீனாவின் லின் டானை எதிர்கொண்டார் பிரணாய். ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்த இந்த ஆட்டத்தை 21-11, 13-21, 21-7 என்கிற கேம் கணக்கில் லின் டானைத் தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார் பிரணாய். இந்த ஆட்டம் 62 நிமிடங்கள் நடைபெற்றது. இருவரும் இதுவரை 5 முறை மோதியதில் பிரணாய் 3 முறை லின் டானைத் தோற்கடித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.