தேர்வுக்குழுத் தலைவராக கும்ப்ளேவை நியமிக்க வேண்டும்: சேவாக் விருப்பம்!

அதுபோன்ற ஒரு நம்பிக்கையை வீரர்களிடம் ஏற்படுத்துவதால், அவரை இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராக...
தேர்வுக்குழுத் தலைவராக கும்ப்ளேவை நியமிக்க வேண்டும்: சேவாக் விருப்பம்!

இந்திய கிரிக்கெட் அணிக்கான தேர்வுக்குழுத் தலைவராக அனில் கும்ப்ளேவை நியமிக்க வேண்டும் என முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

கும்ப்ளேவை கேப்டனாக நியமித்தபோது, என்னுடைய அறைக்கு வந்து, உனக்கு எப்படி விருப்பமோ அதுபோல விளையாடு. அடுத்த இரு தொடர்களுக்கு உன்னை நீக்கமாட்டோம் என்று கூறினார். அதுபோன்ற ஒரு நம்பிக்கையை வீரர்களிடம் ஏற்படுத்துவதால், அவரை இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராகத் தேர்வு செய்யவேண்டும் என்று கூறியுள்ளார். 

உலகக் கோப்பை தோல்வி குறித்து சேவாக் கூறியதாவது: அரையிறுதியில் 5-ம் நிலை வீரராக தோனி களமிறங்கியிருக்கவேண்டும். அதற்குப் பின்னால் பாண்டியா விளையாட வந்திருக்கலாம் என்றவர் மே.இ. தீவுகள் அணிக்கு எதிரான தொடர் குறித்தும் பேசியுள்ளார். இந்திய அணி நான்கு பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கினால் மட்டுமே ரோஹித் சர்மாவுக்கு அணியில் இடம் கிடைக்கும். சமீபகாலமாகச் சரியாக விளையாடாமல் போனாலும் ராஹானேவைத்தான் நான் தேர்வு செய்வேன் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com