மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்கேற்ப புதிய திட்டத்துடன் அடுத்த வருட ஐபிஎல் போட்டியில் களமிறங்கவுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.
ஐந்து முறை பிளே ஆஃப்புக்குத் தகுதி பெற்றும் மூன்று முறை இறுதிச்சுற்றில் விளையாடியும் பிரபல வீரர்களைக் கொண்டிருந்தும் பெங்களூர் அணியால் ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை இதுவரை வெல்லமுடியவில்லை. கடந்த வருடம் 6-ம் இடம், 2017-லிலும் இந்த வருடமும் கடைசி இடம் எனக் கடந்த மூன்று வருடங்களாக மிக மோசமாகவே விளையாடி வருகிறது.
இந்த நிலையை மாற்ற புதிய குழுவை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது ஆர்சிபி அணி. அதன் அடிப்படையில் பேட்டிங் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளார்கள். அதற்குப் பதிலாக தலைமைப் பயிற்சியாளராக சைமன் கடிச்சும் அணி இயக்குநராக மைக் ஹெஸ்ஸனும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இதற்கு முன்பு சைமன் கடிச், கொல்கத்தா அணியின் உதவிப் பயிற்சியாளராகவும் ஹெஸ்ஸன், பஞ்சாப் அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரை வடக்கு தொகுதி திமுக வேட்பாளா்

வேலூா் மாவட்ட அதிமுக கூட்டணி வேட்பாளா்கள்
திருப்பூரில் மாணவரை தாக்கிய போலீஸாா்! சமூக வலைதளங்களில் வைரலான விடியோ!

வந்தவாசி தொகுதியில் அதிமுக முதல் பெண் வேட்பாளா்
வீடியோக்கள்

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...
அதிமுக, பாஜகவால் இறக்கிவிடப்பட்டவர் விஜய்: ஜவாஹிருல்லா பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

லீடர் மிரட்டல் அப்டேட்!
தினமணி வீடியோ செய்தி...

