மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டெஸ்டில் 232 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது இங்கிலாந்து அணி. எனினும் டெஸ்ட் தொடரை 2-1 என வென்றுள்ளது மேற்கிந்தியத் தீவுகள் அணி.
இந்த டெஸ்ட் ஆட்டத்தின்போது மேற்கிந்தியத் தீவுகள் வேகப்பந்துவீச்சாளர் ஷன்னான் கேப்ரியல் - இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது தன்பாலின உறவு குறித்து கேப்ரியல் விமரிசனம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு, இந்தச் சொல்லை ஒருவரை அவமானப்படுத்துவதற்குப் பயன்படுத்தவேண்டாம். தன்பாலின உறவாளராக இருப்பதில் தவறில்லை என்று பதிலளித்துள்ளார் ரூட். இது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது. எனினும் கேப்ரியல் பேசிய சொற்கள் மைக்கில் பதிவாகவில்லை.
இந்நிலையில் ஐசிசி விதிமுறைகளை மீறியுள்ளதாக கேப்ரியல் மீது கள நடுவர்கள் புகார் அளித்துள்ளார்கள். இதனால், கேப்ரியல் மீதான நடவடிக்கை குறித்து டெஸ்ட் நடுவர் ஜெஃப் குரோவ் விரைவில் முடிவெடுக்கவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இது தெரியுமா? கடலிலின் ஆழத்துக்குச் செல்லச் செல்ல அழுத்தம் அதிகமாக இருப்பது ஏன்?

சாதிப் பெயர் சர்ச்சை! மீண்டும் முழுப் பெயர் கூறி எம்எல்ஏவாக பதவியேற்ற கேரள முதல்வர்!
மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவு
ஹார்திக் கேப்டன்சியால் தோற்கிறதா மும்பை?: ரோஹித், திலக், சூர்யா மீது கேள்வி!
விடியோக்கள்
ஹார்திக் கேப்டன்சியால் தோற்கிறதா மும்பை?: ரோஹித், திலக், சூர்யா மீது கேள்வி!

"மின்வாரியத்தில் முறைகேடு! அடிப்படையிலிருந்து சீர் செய்கிறோம்!" அமைச்சர் நிர்மல் குமார் | TVK



