நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

வார் தொழில்நுட்பத்தால் வெற்றி பெற்ற ரியல் மாட்ரிட்

லா லிகா கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் வார் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ரியல் மாட்ரிட் அணி வெற்றது.

News image
Updated On :26 பிப்ரவரி 2019, 1:21 am IST


லா லிகா கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் வார் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ரியல் மாட்ரிட் அணி வெற்றது.
லெவன்டே மற்றும் ரியல்மாட்ரிட் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் வீரர் கரீம் பென்ஸாமா முதல் பாதி முடியும் போது கோலடித்து முன்னிலை பெற்றுத் தந்தார்.
அப்போது லெவன்டே வீரர் எனிஸ் பார்தி கையில் பந்து பட்டதால், வீடியோ உதவி நடுவர் முடிவு மூலம் ரியல் மாட்ரிட்டுக்கு பெனால்டி வாய்ப்பு தரப்பட்டது. ஆனால் தவறு செய்யவில்லை என லெவன்டே வீரர்கள் கடுமையாக ஆட்சேபித்தனர். இதையடுத்து மீண்டும் வார் தொழில்நுட்பத்தின்படி விடியோ காட்சிகள் பார்க்கப்பட்டு இரண்டாவது பெனால்டி தரப்பட்டது. அதை பிசகின்றி கோலாக்கினார் ரியல் மாட்ரிட் வீரர் காரேத் பேல். இறுதியில் 2-0 என வென்ற ரியல் மாட்ரிட், லா லிகா பட்டியலில் பார்சிலோனாவை காட்டிலும் 9 புள்ளிகள் பின்தங்கி உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.