பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

இளம் செஸ் வீரர்களுக்கு உதவ விருப்பமா?: பயிற்சியாளர் ஆர்பி ரமேஷ் கோரிக்கை!

ஒரு மாதத்துக்கு ரூ. 1000 அல்லது தொடர்ச்சியாக உதவுவது போன்ற ஆலோசனைகளை முன்வைக்கிறேன். மொத்தமாக நல்ல தொகை கிடைத்தால்...

News image
Updated On :2 ஜனவரி 2019, 9:30 am

எழில்

தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர்களான தம்பதியர் ஆர்பி ரமேஷ் மற்றும் ஆர்த்தி ராமசாமி ஆகியோர் செஸ் குருகுல் என்கிற செஸ் பயிற்சி மையத்தை சென்னையில் நடத்தி வருகிறார்கள். இந்தியாவின் செஸ் வளர்ச்சிக்கு செஸ் குருகுல் பயிற்சி மையம் முக்கியப் பங்களிப்பை அளித்து வருகிறது. ஆர்பி ரமேஷ் இந்திய செஸ் அணியின் பயிற்சியாளராகவும் உள்ளார். 

இந்தப் பயிற்சி மையத்தில் பயிலும் செஸ் வீரர்கள் பலர் கடந்த வருடம் பல முக்கியப் போட்டிகளை வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமைத் தேடித்தந்துள்ளார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரம் சமீபத்தில் நடைபெற்ற தேசிய சீனியர் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை வென்றார். செஸ் குருகுலைச் சேர்ந்த ஆகாஷ் 2012-ல், 2016-ல் கார்த்திகேயன் முரளி ஆகியோர் இதே பட்டத்தைக் கடந்த சில வருடங்களில் வென்றுள்ளார்கள். பிரக்ஞானந்தா கடந்த வருடம் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆகி, உலகின் இரண்டாவது இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் என்கிற சாதனையை நிகழ்த்தினார். ரக்‌ஷிதா ரவி, திவ்யா தேஷ்முக் ஆகியோர் மகளிர் செஸ் கிராண்ட் மாஸ்டர் தகுதியை அடைந்தார்கள். சவிதாஸ்ரீ கடந்த வருடம் யு-12 உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். திவ்யா தேஷ்முக், தொடர்ச்சியாக இரு வருடங்களாக சப்ஜூனியர் மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றுள்ளார். 2018-ல் அரவிந்த் சிதம்பரம், கார்த்திகேயன் முரளி ஆகியோர் முதல்முறையாக 2600 புள்ளிகளைப் பெற்றார்கள். செஸ் குருகுல் பயிற்சி மையத்தின் மாணவர்களின் இச்சாதனைகளை ஆர்த்தி ராமசாமி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் திறமையான செஸ் வீரர்கள் பலர், பணப்பிரச்னை காரணமாகச் சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாமல் உள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளார் பயிற்சியாளர் ஆர்பி ரமேஷ். இதுகுறித்து அவர் ஃபேஸ்புக்கில் கூறியுள்ளதாவது: செஸ் குருகுல் அமைப்பில் பல திறமையான வீரர்கள் உள்ளார்கள். அவர்கள் இளம் வயதில் பல போட்டிகளில் நன்கு விளையாடியுள்ளார்கள். எனினும் சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாத அளவுக்குப் பணப்பிரச்னைகள் உள்ளதால் அவர்கள் தங்களுடைய முழுத் திறமையை உணரமுடியாமல் உள்ளார்கள். இளம் திறமைகளுக்கு என்னுடைய அருமை நண்பர்கள் உதவவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். ஒரு மாதத்துக்கு ரூ. 1000 அல்லது தொடர்ச்சியாக உதவுவது போன்ற ஆலோசனைகளை முன்வைக்கிறேன். மொத்தமாக நல்ல தொகை கிடைத்தால் இந்த இளம் செஸ் வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த உதவிகரமாக இருக்கும். இதற்கு ஆர்வமுள்ளவர்கள் என்னிடம் தெரிவிக்கவும் என்று கூறியுள்ளார்.

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.