மீண்டும் ஏமாற்றினார் ராகுல்: மயங்க் அகர்வால், புஜாரா அபார பேட்டிங்!
77 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு வலுவான தொடக்கத்தை அளித்தார். புஜாரா இந்த டெஸ்டிலும் பொறுப்புடன் விளையாடி...


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது.
அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்திலும், பெர்த்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பார்டர்-கவாஸ்கர் கோப்பையைத் தக்கவைத்துக்கொண்டது. இந்நிலையில் நான்காவது டெஸ்ட் சிட்னியில் இன்று தொடங்கியுள்ளது.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் ராகுல், குல்தீப் யாதவ் இடம்பெற்றுள்ளார்கள்.
தொடக்க வீரர்களாக ராகுலும் மயங்க் அகர்வாலும் களமிறங்கினார்கள். எதிர்பார்த்ததுபோல சந்தித்த பந்துகளைச் சிரமத்துடன் எதிர்கொண்ட ராகுல் 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பிறகு ஜோடி சேர்ந்த மயங்க் அகர்வாலும் புஜாராவும் பொறுப்புடன் விளையாடி ஆஸ்திரேலிய அணி மேலும் விக்கெட்டுகள் எடுக்காமல் பார்த்துக்கொண்டார்கள். மயங்க் அகர்வால் அற்புதமான ஷாட்களால் இந்திய ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். 15 ஓவர்களில் 51 ரன்கள் கிடைத்தன. இதனால் பவுன்சர் பந்துகள் மூலம் ரன்ரேட்டைக் கட்டுப்படுத்தினார்கள் ஆஸி. பந்துவீச்சாளர்கள். முதல் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்திருந்தது. அகர்வால் 42, புஜாரா 16 ரன்களில் இருந்தார்கள்.
அதன்பிறகு லயன் பந்துவீச்சில் ரன்கள் குவிக்க ஆரம்பித்தார் மயங்க் அகர்வால். அடிக்கடி கிரீஸை விட்டு வெளியே வந்து சிக்ஸ் அடிக்க முயன்றார். 96 பந்துகளில் அரைசதமெடுத்தார். லயன் பந்துவீச்சில் 2 சிக்ஸர் அடித்து மூன்றாவது சிக்ஸருக்கு முயன்றபோது ஆட்டமிழந்தார். அவர் 77 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு வலுவான தொடக்கத்தை அளித்தார். புஜாரா இந்த டெஸ்டிலும் பொறுப்புடன் விளையாடி 134 பந்துகளில் அரை சதமெடுத்தார். இளம் வீரர் மார்னஸ் லாபஸ்சாக்னே வீசிய முதல் ஓவரில் மூன்று பவுண்டரிகள் அடித்து அசத்தினார் புஜாரா.
இன்றைய தினம் சர்வதேச கிரிக்கெட்டில் 19,000 ரன்களைக் கடந்த விராட் கோலி நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. தேநீர் இடைவேளைக்குப் பிறகு வீசப்பட்ட முதல் ஓவரிலேயே 23 ரன்களில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இந்திய அணி 63-வது ஓவரில் 200 ரன்களைக் கடந்தது. புஜாரா 73, ரஹானே 11 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...