நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் கடைசி 2 போட்டிகளில் இருந்தும், டி20 தொடரில் இருந்தும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"கடந்த சில மாதங்களாக விராட் கோலியின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு, இந்தியாவில் நடைபெற இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு முன் அவருக்கு ஓய்வு வழங்குவது தகுந்ததாக இருக்கும் என்று அணி நிர்வாகம் மற்றும் தேர்வுக் குழுவினர் கருதுகின்றனர். அதனால், கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 தொடரில் ரோஹித் சர்மா அணியை வழிநடத்துவார். நியூஸிலாந்து தொடரில் விராட் கோலிக்கு மாற்று வீரர் கிடையாது" என்று தெரிவிக்கப்பட்டது.
நியூஸிலாந்து தொடருக்கு பின் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. அதன்பிறகு ஐபிஎல் தொடர் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து மே, ஜூலை மாதங்களில் உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளது.
அதனால், உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டே இந்திய அணியின் வீரர்களுக்கு சுழற்சி முறையில் ஓய்வு வழங்கப்பட்டு வருகிறது. நியூஸிலாந்து தொடரில் வேகப்பந்துவீச்சாளர் பூம்ராவுக்கு ஏற்கனவே ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது கோலிக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி: அலுவலா்கள் ஒத்துழைப்பு அளிக்க அறிவுறுத்தல்

காரைக்காலில் மிதமான மழை

மன்னாா்குடியில் மிதமான மழை

நாகை, திருவாரூரில் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

