இந்த இரு வீரர்களை இந்திய அணிக்குத் தேர்வு செய்யவில்லையா?: ஆச்சர்யப்படும் செளரவ் கங்குலி!

இந்திய அணியில் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடக்கூடிய பலர் உள்ளார்கள்...
இந்த இரு வீரர்களை இந்திய அணிக்குத் தேர்வு செய்யவில்லையா?: ஆச்சர்யப்படும் செளரவ் கங்குலி!

மே.இ.தீவுகள் தொடருக்கான இந்திய டி20, ஒருநாள், டெஸ்ட் அணிகளை பிசிசிஐ அறிவித்துள்ளது. வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மே.இ.தீவுகளுடன் தலா 3 டி20, ஒருநாள் ஆட்டங்கள், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2 ஆட்டங்களில் இந்தியா ஆட உள்ளது.

உலகக் கோப்பை போட்டியில் ஆஸி.க்கு எதிரான ஆட்டத்தில் கம்மின்ஸ் பந்துவீச்சில் இடது பெருவிரலில் காயமடைந்த ஷிகர் தவன், தற்போது குணமடைந்து மீண்டும் டி20, ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தொடர்ந்து ஆஸி. நியூஸி தொடர்கள், உலகக் கோப்பையில் ஓய்வின்றி ஆடி வந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. பும்ரா, டெஸ்ட் அணியில் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளார். டி 20 அணியில் புதிய இளம் வீரர்கள் களமிறக்கப்படுகின்றனர். பந்துவீச்சாளர்கள் நவ்தீப் சைனி, ராகுல் சஹார், ஷிரேயஸ் ஐயர், மணிஷ் பாண்டே சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் புதுமுகமாக ராகுல் சாஹர் முதன்முறையாக சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல் போட்டியில் ராகுல் சஹார் சிறப்பாக பந்துவீசியதால் அவருக்கு வாய்ப்பு தரப்பட்டது. காயமடைந்த நிலையில் ஓரம் கட்டப்பட்டிருந்த விக்கெட் கீப்பர் ரித்திமான் சாஹா மீண்டும் குணமடைந்ததால், டெஸ்ட் அணியில் 2-ஆம் விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டுள்ளார். புவனேஷ்வர் குமார் அதில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். உலகக் கோப்பை அணியில் இடம் பெற்று சரிவர ஆடாத தினேஷ் கார்த்திக் மே.இ.தீவுகள் தொடரில் சேர்க்கப்படவில்லை. விஜய் சங்கரும் காயமுற்றதால், அவரது பெயரும் பரிசீலிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இரு வீரர்களை இந்திய அணியில் சேர்க்காதது குறித்து தனது ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியுள்ளார் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி. ட்விட்டரில் அவர் கூறியதாவது:

இந்திய அணியில் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடக்கூடிய பலர் உள்ளார்கள். ஷுப்மன் கில் அணியில் இல்லாதது கண்டு ஆச்சர்யப்படுகிறேன். ரஹானேவை ஒருநாள் அணியில் சேர்க்காதது குறித்தும்... என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com