தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விஜய் சங்கரின் முதல்பந்து விக்கெட்டும், குல்தீப்பின் மாயாஜால சுழலும்- வைரலாகும் விடியோ

தமிழகத்தைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர், உலகக் கோப்பை ஆட்டத்தின் முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தி சாதனைப் படைத்தார். 

News image
Updated On :17 ஜூன் 2019, 8:54 am

Raghavendran

பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. சிறப்பாக ஆடிய துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா 140 ரன்கள் விளாசினார்.

இந்நிலையில், ஆட்டத்தின் போக்கை மாற்றிய முக்கிய தருணங்களின் விடியோவை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில்,

தமிழகத்தைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர், உலகக் கோப்பை ஆட்டத்தின் முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தி சாதனைப் படைத்தார். புவனேஸ்வர் குமார் காயமடைந்து வெளியேறிய நிலையில், மீதமிருந்த ஓவரை வீச விஜய் சங்கரை அழைத்தார் கேப்டன் கோலி.

இதையடுத்து பந்துவீசிய விஜய் சங்கர், முதல் பந்திலேயே பாகிஸ்தான் துவக்க வீரர் இமாம்-உல்-ஹக்கை எல்பிடபள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார்.

அதுபோன்று குல்தீப் யாதவின் பந்துவீச்சு பாகிஸ்தான் வீரர்களுக்கு கடும் சவாலை அளித்தது. அவரது சுழலை கணிக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் திணறினர். குறிப்பாக பாபர் அஸாம் தனது இறுக்கமான தடுப்பாட்டத்தையும் மீறி, குல்தீப்பின் மாயாஜால சுழலில் போல்டான தருணம் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.