லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

டெஸ்ட் கிரிக்கெட்டில் நோ பால் வீசினால் ஃப்ரீ ஹிட்: எம்சிசி பரிந்துரை!

இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஃப்ரீ ஹிட் வழங்குவதன் மூலம் நோ பால்களைக் குறைக்கமுடியும்... 

News image
Updated On :13 மார்ச் 2019, 7:26 am

எழில்

கிரிக்கெட் ஆட்டங்களுக்கு விதிமுறை பரிந்துரை செய்யும் எம்சிசி வேர்ல்ட் கிரிக்கெட் கமிட்டி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான புதிய பரிந்துரைகளை ஐசிசிக்கு வழங்கியுள்ளது.

கடந்த வாரம் பெங்களூரில் நடைபெற்ற எம்சிசி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட புதிய பரிந்துரைகள்:

ஒருநாள், டி20 போல டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் நோ பால்களுக்கு ஃப்ரீ ஹிட் வழங்கலாம். 

நோ பாலுக்கு ஃப்ரீ ஹிட் வழங்கினால் அது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தும். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 வருடங்களுக்குப் பிறகு ஒரு நோ பாலை வீசியுள்ளது இங்கிலாந்து அணி. காரணம், ஃப்ரீ ஹிட் தான். இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஃப்ரீ ஹிட் வழங்குவதன் மூலம் நோ பால்களைக் குறைக்கமுடியும். 

டெஸ்ட் ஆட்டங்களில் ஓவர்களை முடிக்க அதிக நேரங்கள் எடுத்துக்கொள்வதால் அதைச் சரிசெய்ய ஸ்கோர்போர்டில் டைமர் கிளாக் பொருத்தப்படும். ஒரு ஓவர் முடிந்தால் கவுண்ட் டவுன் ஆரம்பிக்கப்படும். அது ஜீரோவில் முடியும்போது ஆட்டத்தைத் தொடங்க பேட்ஸ்மேனும் பந்துவீச்சாளரும் தயாராக இருக்கவேண்டும். ஒரு பேட்ஸ்மேன் அவுட் ஆனாலோ, புதிய பந்துவீச்சாளர் பந்துவீச வந்தாலோ ஆட்டம் முறையே 60 நொடிகள், 80 நொடிகளில் தொடங்கப்படவேண்டும். கவுண்ட்டவுன் முடியும்போது ஆட்டம் தொடங்காவிட்டால் எச்சரிகையும் அபாரதமும் விதிக்கப்படும். எதிரணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும். 

அதே போல எல்பிடபிள்யூ டிஆர்எஸ்-ஸின் போது பந்து பேட்டில் பட்டதா என்பதைக் கண்டுபிடிக்க நீண்ட நேரமாகிறது. ஆனால் அதன்பிறகு பந்து ஸ்டம்பில் படாமல் செல்வதைப் பார்க்கமுடிகிறது. இதனால் எந்த முடிவு தெளிவாகக் கிடைக்கிறதோ அதன் மூலம் விரைவாக முடிவெடுக்க வேண்டும்.  

* தற்போது டெஸ்டுகளில் எஸ்ஜி, கூக்கபுர்ரா, டியூக்ஸ் பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அடுத்ததாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கப்படுவதால் எல்லா டெஸ்டுகளுக்கும் ஒரே வகை பந்துகளைப் பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட எஸ்ஜி பந்துகள் குறித்து விராட் கோலி குறை கூறியுள்ளார். இதனால் எல்லா டெஸ்டுகளுக்கும் டியூக்ஸ் பந்துகளைப் பயன்படுத்தவேண்டும் எனப் பரிந்துரைக்கப்படுகிறது. 

*

எம்.சி.சி-யின் இந்த முடிவுகள் ஐசிசிக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து ஐசிசி விரைவில் முடிவெடுக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.